search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு"

    • கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். மாடுகள் அனைத்தும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த மூடப்படாத 20 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த நிலைய அலுவலர் மாதன் மற்றும் கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

    • வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும்.
    • பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன

    பல்லடம் : 

    பல்லடம் வடுகபாளையம் ஹலோபிளாக் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 62). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சுமார் 5 வயதான பசுமாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

    வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். இந்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. அந்த இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இது குறித்து ஈஸ்வரி கூறியதாவது:- எங்கள் வீட்டில் 5 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறோம்.இதுபோல ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது இல்லை. தற்போதுதான் இது நடந்துள்ளது. இதனை எங்கள் குடும்பத்திற்கு "தெய்வத்தின்" கருணையாக பார்க்கின்றோம். பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுந்தரம் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.
    • பசு மாடு 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

    அரவேணு

    கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார். தினமும் அந்த மாட்டை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.


    நேற்றும் வழக்கம்போல் மாட்டை தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று கால் தவறி அங்கு பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.


    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீய ணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலை மையி லான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போரா ட்டத்திற்கு பிறகு பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • டிரான்பார்மரில் பசுமாடு மின் கசிவால் இறந்தது.
    • வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடலூர் ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் இருந்ததே டிரான்ஸ்பார்மில் ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக பசுமாடு உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

    • மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.
    • வயலில் மேய்ந்து கொண்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்த கம்பிகள் காற்றினால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பலியானது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் ,விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு சந்தை பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது.

    அப்போது அருகில் இருந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது .இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை பசுமாடு அடித்த வீ்டியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு :

    பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை பசுமாடு அடித்த வீ்டியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ளது, டி.பி.ஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரா சுவாமி மற்றும் முக்தே சங்கமேஷ்வரா சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் ஒரு பசுமாடு கோவிலை நோக்கி வருகிறது. பின்னர் அந்த பசுமாடு கோவில் முன்பு கட்டியுள்ள மணியை தனது தலையால் முட்டி அடித்துவிட்டு, சில வினாடிக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது.

    அந்த பசு மாடு, அதே பகுதியை சேர்ந்த மஞ்சப்பா என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:-

    12-ம் நூற்றாண்டில் நலத்திட்ட புரட்சி நடந்த போது சரண தொம்பர சென்னம்மா என்பவர் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனால் எங்கள் கிராமத்திற்கு தொம்பர பைரனஹள்ளி என பெயர் வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    இத்தகைய பெயர் பெற்ற எங்கள் ஊரில் வீரபத்ரேஸ்வரா சாமி ேகாவில் உள்ளது. இந்த கோவிலில் குறி கேட்டால் சரியாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அவ்வப்போது கோவிலில் அதிசயங்களும் நடந்து வருகிறது. அதன்படி தான் தற்போது கோவில் மணியை பசுமாடு அடித்துள்ளது. இது தெய்வீக சக்தியால் மட்டுமே நடந்துள்ளது. இதனால் வீரபத்ரேஸ்வரா சாமி மீது இருந்த தெய்வீக பக்தி எங்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×