கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

தாரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட பசுமாட்டுடன் தீயணைப்பு வீரர்கள்.
மீட்கப்பட்ட பசுமாட்டுடன் தீயணைப்பு வீரர்கள்.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் ,விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு சந்தை பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது.

அப்போது அருகில் இருந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது .இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com