என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கசிவால் இறந்த பசுமாடை படத்தில் காணலாம்.
டிரான்பார்மரில் மின் கசிவால் பசுமாடு இறப்பு
- டிரான்பார்மரில் பசுமாடு மின் கசிவால் இறந்தது.
- வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடலூர் ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் இருந்ததே டிரான்ஸ்பார்மில் ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக பசுமாடு உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
Next Story






