search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு"

    • 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைத்து தேடினர்
    • ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டன

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் சிற்றாறு வனப்பகுதி அருகே புலி நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜாவின் உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது மல்லமுத்தன்கரை என்ற இடத்தில் ஒரு புதர் பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் சுமார் 10 இடங்களில் நடந்தது. தொடர்ந்து இரவு பகலாக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று இரவு பழங்குடி மக்கள் குடியிருந்த பகுதியில் இருந்த பசு மாட்டை புலி கடித்தது. புலியின் சத்தம் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் கம்பு, ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள். அதற்குள் புலி சென்று விட்டது. பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்து அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். புலியின் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தற்போது அந்த பகுதி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிரா மாட்டி கண்காணித்து வருகின்றனர்.

    • குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா.
    • இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும்.

    இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று பசு மாடு ஒன்றை இரையாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட பசுவின் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசு மாட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிங்கம் அதை இழுக்க முயற்சிக்கிறது.


    அச்சமயம் அங்கு வந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி திடீரென ஒரு செங்கலை எடுத்து சிங்கத்தை நோக்கி வீசினார். இதைக் கண்டதும் சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் உயிர் பிழைக்கிறது.

    இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பசுவைக் காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.
    • வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசுக்கள் மூலம் பெறப்பட்ட பால் தயிர் வெண்ணெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு 500 நாட்டுப் பசுக்கள் தேவையாக உள்ளது. தற்போது திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.

    மேலும் 300 உயர் ரக நாட்டுப் பசுக்களை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

    அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர் .

    நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    இந்த கன்று குட்டிக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்கப்பட்டது.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்டனர்.

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பசுவை உரியவரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

    • பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை.
    • மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடந்து வருகிறது.

    நேற்று மாட்டுச்சந்தைக்கு விவசாயி ஒருவர் பசுவுடன் வந்திருந்தார். அப்போது அந்த மாட்டின் மடியில் இருந்து பால் தானாக வழிந்தது. இதைப்பார்த்த உரிமையாளர் மடி காம்பின் நுனியில் பசை வைத்து ஒட்டினார்.

    பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை. இதனால் டெப் வடிவிலான பசையை வைத்து ஒட்டி வருவதாக அவர் கூறினார்.

    சில மாட்டுக்கு அதிகப்படியாக பால் சுரக்கும். அந்த பால் மடியில் இருந்து தானாக வெளியேறுவது இயல்பானது.

    ஆனால் அந்த மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.

    எனவே மடியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மடியில் இருந்து பால் வழிவதை தடுக்க பசை மூலம் ஒட்டியிருப்பார்கள்.

    இவ்வாறு செய்வது கொடுமையான விஷயம். இதை உரிமையாளர்கள் செய்யக்கூடாது.

    இவ்வாறு கூறினர்.

    • வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.

    இந்நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரதராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.

    இந்நிலையில் வரதராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
    • கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார்.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருந்த இவருக்கு சொந்தமான பசுமாடு நடந்து செல்லும் போது கொல்லைபுர த்திலிருந்த பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை மீட்க முயற்சித்த நிலையில் பசு மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆழமான பாழும் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேரம் போராடி சாதுர்யமாக பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

    • கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கியங்களும் கிட்டும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரத்தில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் உள்ள கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாட்டு பொங்கலை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கான தம்பதியினர் ஒரே நேரத்தில் கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வேத பண்டிதர் மந்திரங்கள் கூற அதனை திரும்ப கூறி, உதிரி மலர்களாலும், மஞ்சள் தடவிய அட்சதைகளாலும் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்தும், தீபங்கள் காட்டியும் வழிபட்டனர்.

    பின், பசுக்களுக்கு வாழைப்பழங்களையும், கரும்புகளையும் உணவாக அளித்தனர்.

    பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கி யங்களும் கிட்டும் மற்றும் அனைத்து விதமான தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பதும் ஐதீகம் என்கின்றனர்.

    • சின்னமணி-தெய்வானை தம்பதியினர் தங்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.
    • கன்றுகுட்டிக்கு முன்கால் பகுதியின் மேல் பகுதியில் 2கால்கள் கூடுதலாக இருந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னமணி-தெய்வானை தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.

    சினையுடன் இருந்த பசு நேற்று இரவு பெண் கன்றுகுட்டியினை ஈன்றது. பிறந்த அந்த கன்றுகுட்டி மற்ற குட்டிகள் போல இல்லாமல் முன்கால் பகுதியின் மேல் பகுதியில் இரண்டு கால்கள் கூடுதலாக கொண்டு இருந்தது.

    கூடுதலாக இரண்டு கால்கள் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் பிறவி குறைபாட்டால் இப்படி கூடுதல் கால்களுடன் கன்று பிறந்து உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி சரி செய்யலாம் என்றனர்.

    • மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • பசுவின் வயிற்றில் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன.

    மதுரை:

    மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பரமேசுவரன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிர் இனத்தை சேர்ந்த பசு ஒன்றை வாங்கினார். அந்த பசு, 2 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றது. அதன்பின்னரும், பசுவின் வயிறு பெரிதாக இருந்தது.

    எனவே பரமேசுவரன் சந்தேகம் அடைந்து, பசுவை மதுரை கால்நடைத்துறை பன்முக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அந்த பசுவை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்ததில், மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பசுவிற்கு டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்தனர்.

    அந்த பசுவின் வயிற்றில் தேங்கி இருந்த பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் மொத்தமாக வெளியே எடுக்கப்பட்டன.

    சுமார் 65 கிலோ எடையில் அந்த கழிவு பொருட்கள் இருந்தன. மேலும் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன. இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அந்த பசுவும், அதன் கன்றும் மதுரை தல்லாகுளம் பன்முக ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடன் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
    • மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.

    மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.

    ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.

    இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-

    கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.

    இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.

    • இந்திய அரசுக்கு பசு பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது.
    • பசுவை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.

    புதுடெல்லி :

    பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 'கோவன்ஷ் சேவா சதன்' சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்திய அரசுக்கு பசு பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. பசுவை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது. அனைத்தையும் பசுக்களிலிருந்து பெறுகிறோம் என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், அபராதம் விதிக்கும் வகையில் ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? என்ன அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? தேசிய விலங்காக அறிவிக்கச் செய்வதுதான் சுப்ரீம் கோர்ட்டின் பணியா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    பின்னர் மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    ×