என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்பு
- பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்கப்பட்டது.
- தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்டனர்.
புதுக்கோட்டை:
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பசுவை உரியவரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
Next Story






