search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு நாள்"

    • தி.மு.க. அலுவலகத்தில் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர்  வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், அறிஞர், குண.வசந்தரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், நாகராஜ் மற்றும் அன்பரசன்,  தென்னரசு, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கோசல்ராம், கவிதா ராமமூர்த்தி. செல்வம், ஜான்சி, ரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படுகிறது
    • இந்த நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    மதுரை

    முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் நாளை ஏழை எளியவருக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    மதுரையின் முன்னாள் நகர் மன்ற தலைவராகவும் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக 2 முறை திறம்பட மக்கள் பணியாற்றியவர் ஏஜி.சுப்புராமன்.இவரது மகனும், மதுரை மாவட்ட காங்கிரசின் தன்னிகரில்லா தலைவராக விளங்கி மதுரை மக்களின் பேரன்பினால் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு.

    அவர் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இயற்கை எய்தினார். ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள மஹால் வடம்போக்கி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு மீது பற்று கொண்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள், இந்நாள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெருமக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக நலிவுற்ற, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி -சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நினைவேந்த லுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    • எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    • தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • 49-வது நினைவு நாள்

    திருச்சி:திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் க.வைரமணி ஒருஅறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளான நாளை 24-ந் தேதி சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அம்பேத்கர் 66-வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 66- வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிக ழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமார், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    நகரக் செயலாளர் டி. ஜி. சண்முகசுந்தர் தலைமையில், சிங்காரவேலு தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஜி .எம். பாலகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர், சுரேஷ் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சுரேந்தர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், அன்பரசன் நகர அவைத் தலைவர், முருகதாஸ் மாவட்ட பிரதிநிதி, சிதம்பரம் நகர துணை செயலாளர், எம் முருகதாஸ் நகர பாசறை செயலாளர், டி பிரதீப் குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கே ஜகபர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர், மரியதாஸ் நகர இளைஞரணி செயலாளர், தினேஷ்குமார் நகர மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நல்ல மருது நினைவு நாளை முன்னிட்டு 200 பேர் ரத்ததானமும், 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    • இதனை முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியில் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி ரத்தம் கொடுத்து ரத்த தானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக நல்ல மருதுவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் போஸ் முத்தையா, பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர் வாசு, சோலையழகுபுரம் கண்ணன், வக்கீல் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கவுதம் போஸ், விஷ்ணுவரதன், ஆதித்யா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.

    • நல்ல மருது நினைவு நாளில் 5000 பேருக்கு எஸ்ஸார் கோபி அன்னதானம் வழங்குகிறார்.
    • இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த அன்னதானத்தை முன்னாள் மாநகர வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைக்கிறார்.இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக நல்லமருதுவின் திருவுருவப்படத்திற்கு எஸ்ஸார் கோபி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதனை தொடர்ந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் முன்னாள் நகராட்சி சேர்மனும் மாநகராட்சி 84- வார்டு கவுன்சிலருமான போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி திமுக செயலாளர் ஈஸ்வரன்,வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற கவுன்சிலர் ராஜரத்தினம், சோலை அழகுபுரம் பகுதி துணைச் செயலாளர் கண்ணன்,வட்டக் கழக துணை செயலாளர் வழக்கறிஞர் விஜயன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • வருகிற 15-ந் தேதி மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவி சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார்.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி. ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு 15-ந் தேதி திருமங்கலத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுதிறாளிகளுக்கு வெண்கோல், உணவுப்பொருட்கள், வேட்டி-சேலை உள்ளிட்டவைகளை சுந்தர செல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார். அன்று மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார் மற்றும் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது.
    • நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரூர்,

    அரூர் அம்மன் கிரானைட்ஸ், ஏ.ஜி.கிரானைட்ஸ் உரிமை யாளர் முத்துராமசாமியின் தந்தையும், முன்னாள் எம். பி.யுமான முத்துகவுண்டரின் 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்து கவுண்டர் நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பிரேமா முத்து கவுண்டர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சாந்தி முத்துராமசாமி, நேயா அஸ்வின் முத்து, வைஷ்ணவி ரத் னபிரசாத், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், முன்னாள் அமைச் தமிழ் சர் முல்லைவேந்தன், நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலா ளர் நல்லசாமி, மோகன், ராஜ்வேல், சின்னப்பகவுண்டர், பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கர், விவசாய சங்க பொறுப்பாளர்கள் தங்கராஜ், பொன்னுரங்கன், பழனிச்சாமி, கதிரேசன், இ.ஆர்.கே.பள்ளி தாளாளர் செல்வராஜ், பஸ் உரிமையர்கள் தியாகராஜன், முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, அரிமா இளையப்பன், மேகநாதன், தீபக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், தேசிங்குரா ஜன், கொ.ம.தே.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் அசோகன், மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், பெருமாள், கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலா ளர் பிரபாகரன், குமரன், சந்திரன், ஈஸ்வரன், பூபதி, ரத்தினவேலு, ராமசந்திரன், மாதேஷ், ராமர் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

    திருச்சி :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், வன்னை அரங்கநாதன், செந்தில், மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றியச்செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    ×