search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை தீர்ப்பு"

    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர்.

    இந்நிலையில், நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #RafaleDeal #RafaleCase #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். 

    ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.



    இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

    இதற்கிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. #RafaleDeal #RafaleCaseVerdict #SupremeCourt
    சிலை கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது. #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

    அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
     
    இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

    இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு நாளை  தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நாளை பணிஓய்வு பெற உள்ள நிலையில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது. #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    தெலுங்காவின் ஐதராபாத் நகரில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.#HyderabadTwinBombBlastCase
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.  இந்த குண்டு வெடிப்பில் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.  இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக இருதரப்பு வாதங்கள் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.

    இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இரட்டை குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #HyderabadTwinBombBlastCase
    ×