search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rafale deal case"

    ரபேல் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
     
    இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது. ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 



    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜெட்லி மட்டுமே பதிலளித்து வருகின்றனர். மோடி இதுகுறித்து மவுனமாகவே உள்ளார்.

    பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? சிஏஜி அறிக்கை குறித்து அரசு எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #RafaleDeal #RafaleCase #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். 

    ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.



    இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

    இதற்கிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. #RafaleDeal #RafaleCaseVerdict #SupremeCourt
    ×