search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்"

    • நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக நாகராஜா திருக்கோவில் திகழ்கிறது.
    • பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர்.

    நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக நாகராஜா திருக்கோவில் திகழ்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குவது நாகர்கோவில்.

    அந்த மாவட்ட தலைநகரத்தின் தலைசிறந்த ஆலயமாக விளங்குகிறது, அங்குள்ள நாகராஜா திருக்கோவில்.

    நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது.

    கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் இது பெயர் பெற்றுள்ளது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் 'நாகர்கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும்.

    திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

    ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகராஜா கோவில் மட்டுமே ஆகும்.

    ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது.

    வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது.

    இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.

    அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

    பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர்.

    இதையடுத்து ரத்தம் வருவது நின்றது.

    எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர்.

    இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.

    முதலில் குடிசைப் போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர்.

    ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார்.

    அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.

    இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார்.

    ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்து விட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள்.

    கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

    இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.

    இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.

    • புதிய ரயில்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குமரி மாவட்ட மக்கள்
    • தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம், குழித்துறை ரெயில் நிலை யத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப் பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த நேரத்தில் குமரி மாவட்டத் திற்கு புதிய ரெயில்களுக்கான அறிவிப்பு வருமா? என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியா குமரி மாவட்டத்திற்கு புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் கடைசி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு ெரயில் இயக்கப்பட்டால் அது,தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்க ளுக்கு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ தூரம் தான். இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும்.

    திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த மார்க்கத்தில் புதிய ெரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வரு கிறார்கள். ஆகவே தமிழகம் மார்க்கம் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர்கள், சில ரெயில்களை நீட்டித்து இயக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ெரயில்களை, தமிழகத்தின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதராபாத் தினசரி ெரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழி யாக தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டு மல்லாமல் நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

    கன்னியாகுமரியில் இருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ெரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் (16347-16348) இரவு நேர ெரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    வேளாங்கண்ணி மாதா கோவி லுக்கு செல்பவர்கள் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் தினசரி ெரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.

    வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள்.
    • கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்த மர்மநபர்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்மநபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்மநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் என்று எழுதப்பட்டிருந்ததால் அந்த நபர் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். உளவு பிரிவு போலீசாரும், தனி பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணி களின் உடைமை களை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். பாட்டில் களையும் அவர்கள் சோதனை செய்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம், குழித் துறை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.

    • மேயர் மகேஷ் தகவல்
    • இன்று காலை திடீர் ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.15-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலை யத்தில் உள்ள தபால் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிப்பு இன்றி இருந்தது தெரியவந்தது.

    அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அங்குள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தின்பண்டங்கள் சரிவர மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் தின்பண்டங்கள் தயார் செய்த எண்ணை திறந்த நிலையில் இருந்தது. அதை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சோதனை நடத்த மேயர் மகேஷ் உத்தர விட்டார். பஸ்நிலையத்தில் குப்பைகள் கிடந்ததை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் தற்காலிக செட் அமைத்து ஒருவர் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த செட்டை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். சுகாதார பணியாளர்கள் அந்த செட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டி ஒன்று பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த குடிநீர் தொட்டியை மாற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வு பணி குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பழைய இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது புதிய இரு கைகளில் பள்ளி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் அமர வசதியாக புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    பஸ் நிலையத்தில் தற்போது கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் தார்ப் பாய்களால் மூடப் பட்டு உள்ளது. அந்த கடைகளில் உடனடியாக ஷட்டர் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சி.சி.டி.வி. கேமராக்கள் முழுவதும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் இடையூறும் ஏற்படாது என்பதை தெரிந்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

    ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்த்மோகன், என்ஜினியர் பாலசுப்பிர மணியன் மண்டல தலைவர் ஜவகர் கவுன்சிலர் ரோசிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீட்டுமனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி
    • தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.

    பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மனுக்கள் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    அப்போது திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள்‌. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    பாட்டில்களில் என்ன உள்ளது என்பதை குறித்து முகர்ந்து பார்த்து சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். கார்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் டிரைவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்றும் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×