search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுகிறார்"

    • புதிய ரயில்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குமரி மாவட்ட மக்கள்
    • தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம், குழித்துறை ரெயில் நிலை யத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப் பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த நேரத்தில் குமரி மாவட்டத் திற்கு புதிய ரெயில்களுக்கான அறிவிப்பு வருமா? என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியா குமரி மாவட்டத்திற்கு புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் கடைசி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு ெரயில் இயக்கப்பட்டால் அது,தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்க ளுக்கு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ தூரம் தான். இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும்.

    திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த மார்க்கத்தில் புதிய ெரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வரு கிறார்கள். ஆகவே தமிழகம் மார்க்கம் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர்கள், சில ரெயில்களை நீட்டித்து இயக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ெரயில்களை, தமிழகத்தின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதராபாத் தினசரி ெரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழி யாக தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டு மல்லாமல் நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

    கன்னியாகுமரியில் இருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ெரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் (16347-16348) இரவு நேர ெரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    வேளாங்கண்ணி மாதா கோவி லுக்கு செல்பவர்கள் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் தினசரி ெரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×