search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள கட்டிகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (வயது 37). இவர் வனத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்து டன் ராயக்கோட்டை அருகேயுள்ள பூங்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    ரகமதுல்லாவின் வீட்டு மாடியில் உள்ள அறையில் உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை பாஷா மட்டும் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் ரகமதுல்லாவின் செல்போனுக்கு பேசிய பாஷா கீழே உள்ள வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ரகமதுல்லா ஊருக்கு விரைந்து வந்தார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்த ரகமதுல்லா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ரகமதுல்லா புகார்

    செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து வனத்துறை அதிகாரி வீட்டில் கைவரிசை கட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
    • பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திருச்சி :

    திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (60). சந்திரசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு பொன் நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விடுகிறார்.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்ற வசந்தி அறைக்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார் அந்த பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்து இருப்பது தனலட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தனலட்சுமி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்திய போது வீட்டின் அறையில் 4, 5 பீரோவில் இருக்கும் பொழுது குறிப்பாக நகை, பணம் உள்ள பீரோவை மட்டும் சாவி போட்டு யாரோ திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் பீரோவின் சாவியை தனலட்சுமி ஒரு இடத்தில் வைப்பது வழக்கம். அந்த இடத்தில் இருந்து சாவியை எடுத்து பீரோவை வருமா சாமி திறந்து நகை பணத்தை எடுத்துள்ளனர்.

    எனவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் மர்ம ஆசாமி யாரோ தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். திருட்டு போலி நகை பணத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னை கேளம்பாக்கம் ராஜேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (51). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்மிடுவதற்காக ஒரு காரில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

    நள்ளிரவை கடந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது 42 சவரன் நகை மற்றும் 7 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை ஒரு பையில் போட்டு காரின் முன் பகுதியில் வைத்திருந்தனர். பின்னர் ஓய்வு முடித்து எழுந்து மீண்டும் புறப்பட தயாராகி விட்டு பார்த்த போது நகை மாற்றும் பணம் வைக்கப்பட்திருந்த பை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளை கடும் அச்சதிற்கு ஆளாக்கி உள்ளதுடன், பாதிக்கட்டவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    • திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
    • சி.சி.டி.வி.கேமரா மூலம் சிக்கிய 3 கொள்ளையர்கள்

    திருச்சி:

    திருச்சியில் திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி கருமண்டபம், ஆர்.எம்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி நாகலட்சுமி (வயது55). தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகலட்சுமி ரயில்வே துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாகலட்சுமியின் சகோதரன் மகளுக்கு நாளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்கான நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை நாகலட்சுமி பொறுப்பேற்று வாங்கி அவரது வீட்டில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேலும் நகைகள் வாங்குவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் என் எஸ்.பி.சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றுள்ளார். பிற்பகலில் திரும்பி வந்து பர்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, திருமணத்துக்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தடவியல் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு புலன்விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தேகத்துக்குரிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் திருட்டில் தொடர்புடையது தெரிய வந்தது. தொடர்ந்து விடிய, விடிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
    • தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை :

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

    கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

    இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • காரைக்கால் நிரவியில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கபட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க நகை திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார்
    • கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் ரபிதீன் (வயது 46). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி ரபிதீனின் அண்ணன் இறந்து விட்டார்.

    இதனையடுத்து அவர் தனது வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அறையில் இருந்த பிரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், வளையல், வைர மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 19½ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வீட்டிற்கு திரும்பிய ரபிதீன் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடன டியாக போலீ சார் சம்பவ இடத்துக்கு விரை ந்து சென்று விசார ணை நடத் தினர்.

    பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளை யர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்த ப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார்.
    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார். இரவு தோட்டத்து வீட்டில் தங்கினார்.

    நள்ளிரவு விஷ்ணு பிரசாத் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு பிரசாத் டவுன் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார்.
    • பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கந்தசாமிபுதூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக நேற்று துறையூர் பேருந்து நிலையம் வந்தார்.

    அதன் பிறகு சேலம் செல்லும் பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பையை திறந்து பார்த்த பொழுது, பைக்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் எடையுள்ள செயின், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சம்பவம் தொடர்பாக பார்த்திபன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் பட்டப் பகலில் பேருந்து நிலையத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
    • மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 50). இவர் திருச்செங்கோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் உடல்நிலை கோளாறு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

    அப்போது தனது ஓட்டலில் வேலை பார்த்த பரோட்டா மாஸ்டர் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) என்பவரிடம் ஓட்டலை கவனித்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

    பின்னர் சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விஜயகுமார் (35) தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், விரைந்து சென்று பேச்சிப்பாறையில் பதுங்கி இருந்த விஜயகுமாரிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்டனர். பின்னர் போலீசார், அவரை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உண்டியலையும் உடைத்துள்ளனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கூவத்தூர் அருகே உள்ள வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்கத்திலான அணிகலன்களை அணிவித்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கோவில் பூசாரி தினமும் காலை, மாலை வேளைகளில் விளக்கு போடுவது பின்னர் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாமிக்கு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட வேலைகள் முடித்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை கோவில் முன்பக்க கேட்டை 2 பூட்டுகள் போட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் கோவில் பூசாரிக்கு கோவில் கேட் திறந்து கிடப்பதாகவும், உண்டியலில் இருந்து காசுகள் சிதறி கிடைப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்று பார்த்ததில் கருவறையிலுள்ள மாரியம்மன் சிலை கழுத்திலிருந்த சுமார் 22 கிராம் மதிப்பிலான தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரிந்தது.

    நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே தடயம் ஏதும் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த எண்ணையை தடவி கைரேகை பதியா வண்ணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
    • மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.

    மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×