search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கொலை"

    • தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார்.
    • நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானார்.

    இதனால் ரமேஷ் ரெட்டியையும், சுனிதாவையும், நல்லப்பரெட்டி தான் வேலை செய்யும் கிரானைட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து, தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.

    ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானது மட்டும் இன்றி, தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்திலும் இழந்து வந்தார்.

    தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார். மதுப்பழக்கத்தை கைவிடும் படி நல்லப்ப ரெட்டி, ரமேஷ் ரெட்டியிடம் வற்புறுத்தி வந்தார்.

    இதனால் நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வீட்டுக்கு வந்த ரமேஷ் ரெட்டி அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லப்ப ரெட்டி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் பூஜிதா ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேரின் உடல்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. 3 பேரும் அலறியபடி ஓடினர்.

    அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நல்லப்பரெட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, பூஜிதா ஆகியோர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மோகன சுந்தரத்தை அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்புகுமார் உள்பட 3பேரையும் தேடி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சின்னகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது43),தொழிலாளி. இவரது மனைவி செல்வி (41) . இவர்களுக்கு பூவரசன் (13) என்ற மகனும், பூவிழி (10) என்ற மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்விக்கும் , மோகனசுந்தரத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி, மகன் மகளுடன் கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் மோகனசுந்தரம் குடும்பத்திற்கும், அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சம்பூர்ணம் என்பவரது குடும்பத்திற்கும் இட பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோகன சுந்தரத்திற்கும் சம்பூரணத்திற்கும் தகராறு ஏற்படவே, சம்பூரணம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரத்தை கைது செய்து தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

    கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த மோகனசுந்தரம் காலை மாலை வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மோகன சுந்தரத்துக்கும், சம்பூரணத்திற்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் சம்பூரணத்தின் மகன் அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 2பேர் ஆகியோர் மோகன சுந்தரத்தை காரில் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி காரில் ஏற்றி சென்றனர். அதன் பிறகு மோகன சுந்தரத்தை காணவில்லை. நேற்று முத்தூர் வரட்டு கரை அருகே கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகே காட்டுப்பகுதியில் மோகன சுந்தரம் பிணமாக கிடந்தார்

    இது குறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் மோகன சுந்தரத்தை அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்புகுமார் உள்பட 3பேரையும் தேடி வருகின்றனர். முன்விரோத தகராறில் மோகன சுந்தரத்தை கடத்தி சென்று கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. 3பேரை பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் கொலைக்கான காரணம் குறித்து முழு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (வயது49). தொழிலாளி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மாதவரம் ரவுண்டனா அருகே அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மாதவரம் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.

    இதேபோல் ஜூன் மாதம் 3-ந் தேதி நள்ளிரவு ரெட்டேரி பாலம் அருகே மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து முனியசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கையின் போது அவர் சைக்கோபோல் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க பொன்னேரி விரைவு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனையின்படி மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் முனியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    • உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வெங்கடேஸ்வரா நகர் கழுகா சலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ்( 22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

    அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்குமா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது35). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பர்மா காலனியை சேர்ந்த துரைமுருகன் (22) மற்றும் அவரது நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த மோதலில் துரைமுருகன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகராஜுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர்.

    பரமக்குடியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார்.
    • தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி.

    இவரிடம், நவீனா கார்டன் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணன் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கண்ணனிடம் அடிக்கடி சென்று ரஞ்சித்குமார், தனது பணத்தை தருமாறு கேட்டுள்ளார். நேற்று இரவும் கண்ணனின் வீட்டுக்கு சென்று ரஞ்சித்குமார் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.
    • சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.

    சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காலில் வெட்டுக்காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள என்.தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது37). கூலி தொழிலாளியான இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிவசக்தி (23) என்பவருக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.
    • ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில்(வயது28).

    இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    தினமும் இருவரும், அந்த பகுதி முழுவதும் ஒன்றாக சேர்ந்து குப்பைகளை சேகரித்து, அதனை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ்(51) என்பவரும் தங்கி இருந்தார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    2 பேரும் நண்பர்களாக பழகினர். இதையடுத்து 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் பணி முடிந்ததும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் 2 பேரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். மதுகுடித்த பின்னர் தூங்க சென்றனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

    ஆனால் ரமேஷ் வர மறுத்தார். மேலும் உனது ஆடையை களைந்து இருக்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் முகமது பாசிலின் மீது கடும் கோபம் கொண்டார். அவரை கொல்ல முடிவு செய்தார்.

    அதன்படி முகமது பாசில் தூங்கியதும், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது முகமது பாசில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஒரின சேர்க்கைக்கு அழைத்ததால் ரமேஷ், முகமது பாசிலை கல்லை போட்டு கொன்றது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது.
    • மணிகண்டன் குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60).

    இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர்.

    செல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தச்சு வேலை செய்து வந்தார்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் குடிபோதையில் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தனது சகோதரர் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதாக தங்கமாரி சகோதரி செல்வியிடம் கூறி வேதனைபட்டார்.

    அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம், இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சகோதரருக்கு வேலையே கிடையாது. எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வருகிறார் என கேட்டார். அதற்கு அவர்கள், பாலசுப்பிரமணியத்தை திட்டியுள்ளனர்.

    இதனால் பாலசுப்பிரமணியத்திற்கு, மணிகண்டன் மீது கோபம் உண்டானது. நேற்று இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு நெற்றி, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் தீராத பாலசுப்பிரமணியம் இரும்பு கம்பியால் மேலும் அடித்தார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து திருவள்ளுவர் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்டு, உனது தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்து கொள் என்று கூறினார்.

    இதை கேட்டு பதறிப்போன அவர் தனது தாயுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகனின் உடலை பார்த்து வேலம்மாள் கதறி அழுதார்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், சர்தன் (12) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு சுரேஷ் தனது மகனுடன் தென்பரங்குன்றம் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 பேர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேசை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தென்பரங்குன்றத்தை சேர்ந்த டேவிட்ராஜா என்பவரின் மகன் தீனதயாளன். கட்டிட தொழிலாளியான இவர், அந்த பகுதியில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை சுரேஷ் கண்டித்து வந்திருக்கிறார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுரேஷ் தனது மகனுடன் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு தீனதயாளன், தனது நண்பர்களான விக்னேஷ்வரன், சிங்கராஜா ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். சுரேசை பார்த்த அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் தனது நண்பர்களுடன் சுரேசுடன் தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் வாள் மற்றும் கத்தியால் சுரேசை அவரது மகனின் கண்முன் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீனதயாளன், விக்னேஷ்வரன், சிங்க ராஜா ஆகிய 3 பேர் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

    இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.

    மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி கள்ளக்காதலன் முத்துகுமாரிடம் தெரிவித்தேன். அப்போது, அவர் உனது கணவரை கொன்று விடு, அதன் பிறகு நாம் இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், உனக்கும், உனது குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கொலையை எப்படி செய்வது மற்றும் மறைப்பது குறித்தும் திட்டம் தீட்டினோம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.

    தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் புகழரசியையும், சேலம் மத்திய ஜெயிலில் முத்துக்குமாரையும் அடைத்தனர்.

    ×