search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் மழை"

    • தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது.
    • 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. வரத்து 1884 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3361 மி.கனஅடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் 57.48 அடியாக உள்ளது. வரத்து 1756 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3138 மி.கனஅடி.

    57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

    126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடியாக உள்ளது. நீர்வரத்து 44 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 94.34 மி.கனஅடி. அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டு மானாலும் முழுகொள்ள ளவை நெருங்கும் என்பதால் வராக நதிக்கரையோரம் உள்ள மக்களுக்கு பொது ப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 7-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழை யால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 2893 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.45 அடியாக உள்ளது. மழை கைகொடுக்கும்ப ட்சத்தில் 136 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள தாலும், முல்லைபெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படு வதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1760 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 56.66 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது. 45 கனஅடிநீர் வருகிறது. 10 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32.2, தேக்கடி 45, கூடலூர் 5.2, உத்தம பாளையம் 5.6, சண்முகா நதிஅணை 6.8, போடி 17.6, வீரபாண்டி 39, சோத்து ப்பாறை 8, மஞ்சளாறு அணை 24, பெரியகுளம் 15, வைகை அணை 24, அரண்மனைப்புதூர் 26, ஆண்டிபட்டி 10 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று 7-வது நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவ தால் தடை தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
    • 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில்மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மலையோர கிராமங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறையில் அரசு லேபர் காலனிக்கு செல்வததற்கு தரைப்பாலம் உள்ளது. கடந்த 2 தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாகஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தரைப்பாலத்தில் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2 நாட்களாக கோதையாறு, மோதிரமலை, குற்றியார் போன்ற மலையோர பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள தரை பாலங்களும் தண்ணீ ரில் மூழ்கின. இதனால் 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதி மக்கள் வேலைகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் அவதி படுகிறார்கள்.

    கடந்த 4 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையிலும் மழை பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

    இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. அவற்றில் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    • ஜவ்வாது மலையில் தொடர் மழை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    அணைக்கட்டு:

    ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உத்திரகாவேரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் மழையினால் மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது.

    இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மழை

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அயோத்தியாப் பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதே போல் ஆணைமடுவு, பெத்த நாயக்கன் பாளையம், சேலம் மாநகரம், ஏற்காடு, கரியகோவில், காடையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. சேலம் மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மேட்டூரில் 28.40 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆணை மடுவு-9, பெத்த நாயக்கன்பாளையம்-8, சேலம்-3.90. ஏற்காடு-3.20, கரிய கோவில்-3. காடையாம்பட்டி-3, ஆத்தூர்-1.20 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 59.70 மி.மீ.மழை கொட்டியது.

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலை நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆணைமடுவு - 5, ஏற்காடு-2.8, கடையாம்பட்டி-1, சேலம் - 0.3 என மொத்தமாக 9.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.
    • அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் தொட ர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்று பகல் பொழுதில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    தேனியில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. பெரியகுளத்தில் இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. ஆண்டிபட்டி பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழையுடன் குளிர்ந்தகாற்று வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடி தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 7.2, சண்முகாநதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீரபாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.
    • கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

    புதுச்சேரி:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நிலை கொண்டுள்ள தால், காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழை மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரையில் கடல் சீற்ற மாக காணப்பட்டது.

    லேசான மழை பெய்து வருகிறது. தொடர் மலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்ல வில்லை. கடலில் ஏற்கெனவே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது கரை திரும்பி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு களும் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் பாது காப்பாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளது. காரைக்கா லில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவத் தொழிலாளர்கள் கடலுக்கு செல்லவில்லை.   காரைக்கால் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதியில், பொது மக்களுக்கும் சுற்றுலா வாசி களுக்கும் குளிக்க தடை விதித்து போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதொடர் மழையால் காரைக்கால் மாவட்டத்தில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகலில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் போக்கு வரத்து பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. காரைக்காலில் பெரும்பா லான பகுதிகளில் சாலை கள் குண்டும் குழியு மாக இரு ப்பதால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து இருப்பதால் அறுவடை பணி பாதிக்க ப்பட்டுள்ளது. இதனால் அறுவடைப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளா னாலும், விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • அரசு தரப்பில் உதவிகள் வழங்கப்படவில்லை என புகார்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கத் தில் தொடரும் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் சேதமடைந் துள்ளன. கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சா புரம் ஆகிய ஒன்றிய பகு திகளில் கடந்த ஆடி மாதம் சம்பா பயிரான பொன்னி விதைக்கப்பட்டது.

    நெல் விதைத்து நடவு செய்து 6 மாதத்துக்குப் பின் தற்போது அறுவடை செய்யும் நிலையில் பயிர் தயாரானது. பல இடங்க ளில் பயிர் அறுவடை முடிந்த நிலையில் மழை தொடர்ந்துவருகிறது.

    அறுவடை செய்வதற்கு ஏந்திரங்களும், தொழிலாளர்களும் கிடைக்காத நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் விடப்பட்டுள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கலசப்பாக்கம் பகுதியில் எந்த தொழிற்சாலையும் கிடையாது. இதனால் வெளி மாநிலங்களில் சென்று தான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கொரோனா தாக்குதலினால் கடந்த 2 ஆண்டுகள் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். ஆறுதலாக சம்பா பருவம் கைகொடுக்கும் என நம்பினோம். தற்போது நெல்கொள்மு தல் விலையும் சற்று அதி கரித்துள்ளது. இந்நிலை யில் அறு வடைக்காலத்தில் மழைபெய்தால் பயிர்கள் நீரில் மூழ்கின.

    கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனைக்குள்ளா கியுள்ளனர்.

    தற்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் மழை பாதிப்புக்குள்ளான நெற் பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    தென்மேற்கு வங்க க்கடலில் மையம் கொண்டி ருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 30 அடி வரை கடல் அலை முன்னோக்கி வந்து செல்கின்றது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு மற்றும் காலை வரை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு முதல் பனி இருந்த வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவும், குளிரும் இருந்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ள தால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவ தோடு, குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ ஆலை யங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடி யாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்ததும் காண முடிந்தது. மேலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைப்பிடித்த படியும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் சென்ற தையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- கடலூர் - 12.3, பரங்கிப்பேட்டை - 4.2, அண்ணாமலை நகர் -3.5, சிதம்பரம் - 2.5, கலெக்டர் அலுவலகம் - 0.2. மொத்தம் - 22.70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பே ட்டை, காடாம்புலியூர் ஆகிய இடங்களில் இன்று காலை திடீர் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ள நீராகபெருக்கு பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் சாலை களில் ஊர்ந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக சாலை பணியை நடக்கா ததால் பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி- கும்பகோணம் சாலை முற்றிலும் சேதமடைந்து மழையில் சேரும் சகதியமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • ஜெயங்கொண்டம் அருகே பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
    • மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட் சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.

    மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையில் சரலை மண் கொட்டி மேடாக்கி சாலையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழப்பாடி அருகே உள்ள கரியகோவில் தடுப்பணை தொடர் மழையால் நிரம்பியது.
    • பலரும் அங்கு குளித்து மகிழ வருவதால் அந்த பகுதி சுற்றுலா தலமாக மாறியுள்ளது

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனம் பெறுகின்றன.

    கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன் பாளையம் கிராமங்களில் ஏரிகளும் அமைந்துள்ளன.

    கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த மழையால், கடந்த அக்டோபர் 25–ந் தேதி கரியகோயில் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, 50.52 அடியில் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு தொடர்ந்து வரும் தண்ணீர் முழுவதும் கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 25 நாட்களுக்கு மேலாக கரியக்கோயில் ஆற்றில், இரு கரையையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்கிறது.

    கடந்த சில தினங்களாக மழையில்லாததால் ஆற்றில் தெளிந்த நீர் வழிந்தோடிச் செல்கிறது. ஓராண்டுக்கு பிறகு கரியக்கோயில் ஆற்றில் தெளிந்த நீர் செல்வதால், ஆற்றில் ஆழம் குறைந்த பகுதிகளிலும், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி தடுப்பணைகளிலும் இளைஞர்கள் குதித்து ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, பச்சை பசேலென வயல்வெளிகளுக்கு இடையே ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள ஏ.குமாரபாளையம் தடுப்பணையிலும், ஆற்றிலும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் வந்து நீராடி மகிழ்ந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி சுற்றுலாத் தலத்தை போல காட்சியளிக்கிறது.

    ×