search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    ஒடுகத்தூர் பகுதியில் செல்லும் உத்திரக்காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ள காட்சி.

    உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • ஜவ்வாது மலையில் தொடர் மழை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    அணைக்கட்டு:

    ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உத்திரகாவேரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் மழையினால் மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது.

    இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

    Next Story
    ×