search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.
    • அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் தொட ர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்று பகல் பொழுதில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    தேனியில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. பெரியகுளத்தில் இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. ஆண்டிபட்டி பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழையுடன் குளிர்ந்தகாற்று வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடி தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 7.2, சண்முகாநதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீரபாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×