என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் தொடர் மழைமேட்டூரில் அதிகபட்சமாக 28.40 மி.மீ. மழை கொட்டியது
    X

    சேலம் மாவட்டத்தில் தொடர் மழைமேட்டூரில் அதிகபட்சமாக 28.40 மி.மீ. மழை கொட்டியது

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மழை

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அயோத்தியாப் பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதே போல் ஆணைமடுவு, பெத்த நாயக்கன் பாளையம், சேலம் மாநகரம், ஏற்காடு, கரியகோவில், காடையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. சேலம் மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மேட்டூரில் 28.40 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆணை மடுவு-9, பெத்த நாயக்கன்பாளையம்-8, சேலம்-3.90. ஏற்காடு-3.20, கரிய கோவில்-3. காடையாம்பட்டி-3, ஆத்தூர்-1.20 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 59.70 மி.மீ.மழை கொட்டியது.

    Next Story
    ×