என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தொடர் மழையால் கிடுகிடுவென உயரும் அணைகளின் நீர்மட்டம்
- மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
- 7-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழை யால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 2893 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.45 அடியாக உள்ளது. மழை கைகொடுக்கும்ப ட்சத்தில் 136 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள தாலும், முல்லைபெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படு வதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1760 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 56.66 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது. 45 கனஅடிநீர் வருகிறது. 10 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 32.2, தேக்கடி 45, கூடலூர் 5.2, உத்தம பாளையம் 5.6, சண்முகா நதிஅணை 6.8, போடி 17.6, வீரபாண்டி 39, சோத்து ப்பாறை 8, மஞ்சளாறு அணை 24, பெரியகுளம் 15, வைகை அணை 24, அரண்மனைப்புதூர் 26, ஆண்டிபட்டி 10 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று 7-வது நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவ தால் தடை தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.






