search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous rains"

    • வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • 71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகர குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்தது.

    71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 781 கனஅடிநீர் வருகிறது. 69 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    66 அடியை எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 68.50 அடியில் 2-ம் கட்டமும், 69 அடியாக உயர்ந்தபின்னர் 3-ம் மற்றும் இறுதி கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும்.

    மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.85 அடியாக உள்ளது. 593 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 73 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 2, போடி 0.4, வீரபாண்டி 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வைகை அணை 3.6, வீரபாண்டி 3, ஆண்டிபட்டி 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 7-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழை யால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 2893 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.45 அடியாக உள்ளது. மழை கைகொடுக்கும்ப ட்சத்தில் 136 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள தாலும், முல்லைபெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படு வதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1760 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 56.66 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது. 45 கனஅடிநீர் வருகிறது. 10 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32.2, தேக்கடி 45, கூடலூர் 5.2, உத்தம பாளையம் 5.6, சண்முகா நதிஅணை 6.8, போடி 17.6, வீரபாண்டி 39, சோத்து ப்பாறை 8, மஞ்சளாறு அணை 24, பெரியகுளம் 15, வைகை அணை 24, அரண்மனைப்புதூர் 26, ஆண்டிபட்டி 10 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று 7-வது நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவ தால் தடை தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மழைப்பொழிவால் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டு க்கல், தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்றுமாலை சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்ட த்துடனே உள்ளது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்து உள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் 2-ம் கட்ட உரம் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயி ர்களில் கதிர் தள்ளும் பருவம் என்பதால் மழை ஏதுவாக இருக்கும். மேலும் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 515 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.88 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்ப க்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் அனுமதி அளித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியாறு 12, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதிஅணை 3, போடி 6.2, மஞ்சளாறு 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    • நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்ெபரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 118.40 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுவதால் மின் உற்பத்தியும் நடந்து வருகிறது. நீர் இருப்பு 2339 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 47.24 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 332 கன அடி நீர் வருகிறது.

    அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1650 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்து 141 கன அடி. இருப்பு 324.54 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.25 அடி. வரத்து 30 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 35.54 மி.கன அடி.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியாறு 1, தேக்கடி 0.2, வைகை அணை 54, கொடைக்கானல் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர்.
    • கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பணக்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, தலமலை, ஆசனூர், கேர்மாளம், குழியாடா, திங்களூர் என 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள விவசாயிகள் ஆகஸ்ட் மாதம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர். 3 மாத கால பயிரான மக்காச்சோளம் நல்ல மழை பெய்து நன்கு வளர்ந்து அறுவடைக்கு தற்போது தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன. இதற்கிடையே அறுவடையான மக்காச்சோளக்கதிர்களை உலர்களத்தில் போட்டுள்ள நிலையில் மழைநீர் புகுந்ததால் மக்காச்சோளக்கதிரில் முளைப்பு தன்மை ஏற்பட்டு அனைத்து மக்காச்சோளம் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆயிரக்கணக்கான மக்காச்சோள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான கான்கிரீட் உலர்களங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
    • ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தற்போது தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மழை பரவலாக மழைபெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதியில் மழை வெளுத்த வாங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம். தற்போது பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படும். விளை நிலங்களில் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாக பாசன வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காத காரணத்தாலும் மெத்தன போக்காலும் அதிகளவு மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடுவழங்க வேண்டும் என்றனர்.

    • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள், குளம், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.05 அடியாக உள்ளது. 1739 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. அணைக்கு 2027 கனஅடிநீர் வருகிறது. 1319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 408 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு 40 கனஅடிநீரும், உபரியாக 368 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 6.2, கூடலூர் 17.6, உத்தமபாளையம் 9.4, வைகை அணை 48, மஞ்சளாறு 8.6, சோத்துப்பாறை 12, ஆண்டிபட்டி 33.4, அரண்மனைப்புதூர் 4.5, போடி 4.8, பெரியகுளம் 9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தினமும் அல்லல்படும் மக்கள்- நிரந்தர தீர்வு கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.
    • மேம்பால கீழ் பகுதி-சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த சில தினங்களாகவே காலையில் மிதமான வெயிலும், மாலை நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நேற்று காலை வெயில் தாக்கம் குறைந்து இதமான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து, பகல் வேளையே இரவு போன்று காட்சியளித்தது.

    தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. லேசான மழையாக தொடங்கி பலத்த மழையாக 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இதன் காரணமாக, கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஸ்டேட் பாங்க் ரோடு, ஆத்துப்பாலம் ரோடு, சுந்தராபுரம் சாலை என நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சாலையே தெரியாத அளவிற்கு முழுவதுமாக மறைந்து குளம் போல தேங்கியதுடன், ஆறாகவும் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சாலைகளில் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனை பார்க்கும் போது, கடலில் படகு மிதந்து செல்வதை போன்று உணரமுடிந்தது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.

    வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.மழைக்கு ஒதுங்க முடியாமலும், ரோட்டில் செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் தவிப்படைந்தனர்.

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதி சுரங்கப்பாதை, வடகோவை மேம்பால சுரங்கப்பாதை, கிக்கானி பள்ளி ரெயில்வே பாலம், லங்கா கார்னர் பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் தவிப்படைந்தனர்.

    கோவை சங்கனூரில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியிலும் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக வந்த கல்லூரி பஸ் சிக்கி கொண்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். லங்கா கார்னர் பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்சை பொதுமக்கள் தள்ளி வெளியே மீட்டனர்.

    மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தேங்கியுள் மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேம்பால கீழ் பகுதிகளில் வெள்ளம் வழிந்து செல்லும் வடிகால் தாழ்வான இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து மேடான இடத்திற்கு வாய்க்கால் இருக்கிறது.

    இதன் வழியாக நீர் பாய வழியில்லாத நிலையில் குளம்போல் நீர் தேங்கி விடுகிறது. குறிப்பாக அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குகிறது.நகரில் உள்ள பெரும்பாலான சப்வேக்கள் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இங்கே மழை பெய்து வெள்ளம் தேங்கும் போது போக்குவரது பாதிப்பு ஏற்படுகிறது. நீர் குளங்களுக்கு செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்படவில்லை. வடிகால் பல இடங்களில் மேடாகவும், பிளாஸ்டிக் குவியல்களால் அடைக்கப்பட்டு இருக்கிறது.எனவே இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×