search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் பிடிப்பில் தொடர் மழை :பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
    X

    கோப்பு படம்

    நீர் பிடிப்பில் தொடர் மழை :பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    • தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    • நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்ெபரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 118.40 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுவதால் மின் உற்பத்தியும் நடந்து வருகிறது. நீர் இருப்பு 2339 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 47.24 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 332 கன அடி நீர் வருகிறது.

    அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1650 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்து 141 கன அடி. இருப்பு 324.54 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.25 அடி. வரத்து 30 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 35.54 மி.கன அடி.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியாறு 1, தேக்கடி 0.2, வைகை அணை 54, கொடைக்கானல் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×