search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maize crops damaged by"

    • விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர்.
    • கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பணக்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, தலமலை, ஆசனூர், கேர்மாளம், குழியாடா, திங்களூர் என 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள விவசாயிகள் ஆகஸ்ட் மாதம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர். 3 மாத கால பயிரான மக்காச்சோளம் நல்ல மழை பெய்து நன்கு வளர்ந்து அறுவடைக்கு தற்போது தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன. இதற்கிடையே அறுவடையான மக்காச்சோளக்கதிர்களை உலர்களத்தில் போட்டுள்ள நிலையில் மழைநீர் புகுந்ததால் மக்காச்சோளக்கதிரில் முளைப்பு தன்மை ஏற்பட்டு அனைத்து மக்காச்சோளம் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆயிரக்கணக்கான மக்காச்சோள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான கான்கிரீட் உலர்களங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×