search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.
    • விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை (26-ந் தேதி) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கடற்கரை சாலையில் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    அதன் பிறகு தேசிய கொடி கோட்டையில் பறக்க விடப்படும். இந்த தேசிய கொடி ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கொடி சென்னை வரவழைக்கப்பட்டு காதி கிராமோத் யோக் பவனில் தயாராக உள்ளது.

    இந்த தேசிய கொடி தயாரிப்பு பற்றி காதி கிராமோத் யோக் பவன் மேலாளர் சுந்தர் கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.

    மத்திய அரசின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெக் மரத்து வாடாவில் காதி நிறுவனத்தில் நான்கு இழைகளால் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த தேசிய கொடிகளுக்கு என்று தனித்தனி அளவுகள் உள்ளது. கதர் வாரியம்தான் இந்த கொடிகளை விற்பனை செய்யும்.

    அந்த வகையில் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

    கோட்டையில் பறக்க விடப்படும் தேசிய கொடி உள்பட அனைத்து மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் நிறுவனங்களும் காதி நிறுவனத்தில்தான் தேசிய கொடியை வாங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாயின் முதுகில் இந்திய தேசிய கொடியை கட்டிவிட்டு உலவவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேச விரோத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என தேனி மாவட்ட பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த நாய் எங்கெல்லாம் சென்று வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி(49) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் தான் குடிபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கையில், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் வேறு ஒருவரை பிடித்து அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விடுவித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

    • தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.
    • தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு, கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து, குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்திலும் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

    மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி கடைகள், வீடுகளுக்கு நேரடியாக சென்ற உள்ளாட்சி அமைப்பினர், தேசிய கொடிகளை வினியோகித்தனர். அவ்வாறு ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை முறையாக இறக்கி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட் டது. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகள், கடைகளில் நீண்ட நாட்கள் ஆகியும் தேசிய கொடி இறக்கப்படாமல் விடப்பட்டன.

    சிலர் தேசப்பற்றை வெளிப்படுத்துவதாக கூறி, பொது இடங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள், தொலைபேசி கம்பங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்றி வைத்தனர். சுதந்திர தினம் முடிந்ததும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.தேசிய கொடியை சேதமடைய செய்வது மற்றும் அவமதிக்கும்படியான செயல்களை செய்தால் அது தேச விரோத குற்ற செயலாக கருதப்படுகிறது. குடியிருப்புகள், கடைகளில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இருந்தும் பெரும்பாலான இடங்களில் தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.

    இதனால் தேசிய கொடிகள் காற்றில் கீழே விழுந்து அழுக்கடைவதும், சேதமடைவதுமாக அவமதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏற்றி வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்குமாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    ஆனேக்கல் :

    பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

    மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • தேசியக்கொடிகள் அவமதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது.

    திருப்பூர் :

    நாட்டின் சுதந்திர தின 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு மக்களிடையே தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.பிரதமரின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. கொடியை ஏற்றுவதில் ஆர்வம் காட்டிய பலர் அதை முறையாக இறக்காமல் உள்ளனர்.

    சுதந்திர தின விழா முடிந்து 1½ மாதங்கள் ஆன நிலையிலும், பெரும்பாலான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொடிகள் இறக்கப்படாமல் உள்ளன. இதனால் கிழிந்தும் கீழே விழுந்தும் தேசியக்கொடிகள் அவமதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது. வீடு தோறும் சென்று தேசியக்கொடிகள் வழங்கிய உள்ளாட்சி அமைப்புகள், அவற்றை முறையாக இறக்கி வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் விதிமுறைகளை மீறி, 24 மணி நேரமும் தேசிய கொடிகள் பறந்து வருகின்றன.தேசிய கொடி அவ மதிப்பு ஏற்படும் முன் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.
    • கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றியும் நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.

    சட்டமன்றம் ஆரம்பித்த 1921 முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

    தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது கேள்வி பதில் நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இனி சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

    கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    1962 இந்தியா-சீன போரின்போது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மகாபலிபுரத்தில் சீனா அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் வரை 57 ஆண்டுகள் சீன எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு தற்போது இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்த கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து தேசிய கொடிகளை இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது.

    மேலும் மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு, நம்முடைய தேசிய கொடி மேட் இன் சைனாவாக இருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது குறித்து அனைத்து சபாநாயகர்களும், பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு அவர் புன்முறுவலோடு சென்றுவிட்டார். மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு தேசியக்கொடியை மேட் இன் சைனாவுடன் நமது தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு செல்லும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருந்தது.

    மேலும் இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால் சீன உளவு கப்பல் வந்தது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
    • தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்கீழ் 13- ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர் . இத்திட்டம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவினை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பிறப்பித்து உள்ளார்.

    • இந்த தேசிய கொடி 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது ஏற்றப்பட்டது.
    • அந்த தேசிய கொடியை 1947-ம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார்.

    விஜயாப்புரா :

    நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அதுபோல், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா தலதவாடி டவுனில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த பள்ளியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி, 75 ஆண்டுகளுக்கு முன்பு, தலதவாடியில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்றப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

    அதாவது தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில், நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததும் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவு தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அந்த தேசிய கொடியை பள்ளி ஆசிரியரிடம் இருந்து, அதே கிராமத்தை சேர்ந்த கங்காதர் நரசிங்கராவ் குல்கர்னி என்பவர் வாங்கி வைத்திருந்தார். தற்போது அவருக்கு 91 வயதாகிறது. 1947-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த போது, கங்காதரிடம் தேசிய கொடியை ஆசிரியர் கொடுத்திருந்தார். அதன்பிறகு, அந்த தேசிய கொடியை கங்காதர் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட, அந்த தேசிய கொடியை எடுத்து தனது வீட்டில் கங்காதர் ஏற்றி மரியாதை செலுத்துவார். சுதந்திர தின பவள விழா காரணமாக தான் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் அந்த தேசிய கொடியை, தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில் ஏற்றுவதற்காக கங்காதர் கொடுத்திருந்தார். இதையடுத்து, அந்த பள்ளியில் நேற்று 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 75 ஆண்டுகள் தனிச்சிறப்பு பெற்ற தேசிய கொடியை பள்ளியில் ஏற்றியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அந்த தேசிய கொடியை 1947-ம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார். அன்று முதல் தற்போது வரை அந்த தேசிய கொடியை கங்காதர் பாதுகாத்து வருகிறார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டில் அந்த தேசிய கொடியை வைக்காமல், தலதவாடி கிராமத்தில் உள்ள வங்கியின் லாக்கரில் அவர் வைத்திருக்கிறார். தேசிய கொடிக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாக்கரில் வைத்திருப்பதாக கங்காதர் கூறியுள்ளார். தேசிய கொடி மீது கங்காதருக்கு இருக்கும் மரியாதையை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது.
    • 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றும் 53 பேருக்கும் மாவட்ட போலீசில் பணியாற்றும் 40 பேருக்கும், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், வேளாண் துறை, மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைபட்டா, தாட்கோ திட்டத்தின் மூலம் சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனம், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர்கள் வனிதா, அபினவ் குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர். இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முகப்பு பகுதி நேற்று முதல் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடுகள்தோறும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளுக்கும் மொத்தம் 1.98 லட்சம் அளவிலான கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்றுவதற்காக சுமார் 32,000 கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39,681 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35,301 தேசிய கொடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 37,256 தேசிய கொடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48,436 தேசிய கொடிகளும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3,400 தேசிய கொடிகளும்,

    குரும்பலூர் பேரூராட்சியில் 3,694 தேசிய கொடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4,100 தேசிய கொடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 3,216 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் நகராட்சியில் 14,706 தேசிய கொடிகளும் என மொத்தம் 1,89,790 தேசிய கொடிகள் வீடுகளில் மட்டும் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்றுவதற்காக என மொத்தம் 2.30 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மற்றும் அரசு அலுவலர்களும் தங்களது இல்லங்களில் மற்றும் தங்களது அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசியக்கொடிகளை ஏற்றுகின்றனர். வணிக நிறுவனங்களில் நிறுவனத்தின் நிர்வாகிகளும், சிறு,குறு தொழிற்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடிகளில் 80 சதவீத கொடிகள் பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திரத்திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

    நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் வீடு, வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
    • வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.

    திருப்பரங்குன்றம்

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி மத்திய, மாநில அரசுகள் அதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

    பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    அதில் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ், உதவி ஆணையர் சையது முஸ்தபா கமல் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் நகர் பகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.

    ×