search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flag hoist"

    • சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது.
    • 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றும் 53 பேருக்கும் மாவட்ட போலீசில் பணியாற்றும் 40 பேருக்கும், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், வேளாண் துறை, மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைபட்டா, தாட்கோ திட்டத்தின் மூலம் சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனம், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர்கள் வனிதா, அபினவ் குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொடியை அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.
    • 11-ம் திருவிழாவான, 1-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 11நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா நாளை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடியேற்றம்

    திருவிழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார். தொடர்ந்து 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருதல், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சி படிப்பு, பணிவிடை, பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனியும் மாலை 6 மணிக்கு அன்ன தர்மம் வழங்குதல் நடக்கிறது.

    பணிவிடை

    இரண்டாம் திருவிழாவான 23-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 10ம் திருவிழா 31-ந் தேதி வரை காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, மாலை 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 1 மணிக்கும், மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது. மாலை 4மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11-ம் திருவிழாவான, 1-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம் நடக்கிறது.


    தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பகல் 2 மணிக்கும் இரவு 8 மணிக்கும் அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது. நள்ளிரவு 1மணிக்கு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பவனி வருதல் இரவு 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது.

    வாகனத்தில் பவனி

    விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திர ஆகிய வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×