search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கொடிகளை இறக்கி வைக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    தேசிய கொடிகளை இறக்கி வைக்க வேண்டுகோள்

    • தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.
    • தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு, கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து, குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்திலும் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

    மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி கடைகள், வீடுகளுக்கு நேரடியாக சென்ற உள்ளாட்சி அமைப்பினர், தேசிய கொடிகளை வினியோகித்தனர். அவ்வாறு ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை முறையாக இறக்கி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட் டது. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகள், கடைகளில் நீண்ட நாட்கள் ஆகியும் தேசிய கொடி இறக்கப்படாமல் விடப்பட்டன.

    சிலர் தேசப்பற்றை வெளிப்படுத்துவதாக கூறி, பொது இடங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள், தொலைபேசி கம்பங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்றி வைத்தனர். சுதந்திர தினம் முடிந்ததும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.தேசிய கொடியை சேதமடைய செய்வது மற்றும் அவமதிக்கும்படியான செயல்களை செய்தால் அது தேச விரோத குற்ற செயலாக கருதப்படுகிறது. குடியிருப்புகள், கடைகளில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இருந்தும் பெரும்பாலான இடங்களில் தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.

    இதனால் தேசிய கொடிகள் காற்றில் கீழே விழுந்து அழுக்கடைவதும், சேதமடைவதுமாக அவமதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏற்றி வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்குமாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×