search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கொடிகளை இறக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம்.

    தேசிய கொடிகளை இறக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

    • வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • தேசியக்கொடிகள் அவமதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது.

    திருப்பூர் :

    நாட்டின் சுதந்திர தின 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு மக்களிடையே தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.பிரதமரின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. கொடியை ஏற்றுவதில் ஆர்வம் காட்டிய பலர் அதை முறையாக இறக்காமல் உள்ளனர்.

    சுதந்திர தின விழா முடிந்து 1½ மாதங்கள் ஆன நிலையிலும், பெரும்பாலான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொடிகள் இறக்கப்படாமல் உள்ளன. இதனால் கிழிந்தும் கீழே விழுந்தும் தேசியக்கொடிகள் அவமதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது. வீடு தோறும் சென்று தேசியக்கொடிகள் வழங்கிய உள்ளாட்சி அமைப்புகள், அவற்றை முறையாக இறக்கி வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் விதிமுறைகளை மீறி, 24 மணி நேரமும் தேசிய கொடிகள் பறந்து வருகின்றன.தேசிய கொடி அவ மதிப்பு ஏற்படும் முன் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×