search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள்"

    • தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
    • மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.

    அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.

    இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.

    இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.

    6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.

    இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
    • விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.

    நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

    சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

    இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

    ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

     வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்து பாளையம், காடையூரான் வலசு, சேனாபதிபாளையம் ஆகிய ஊர்களில் தெரு நாய்கள் 100க்கும் மேற்பட்ட பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.தற்போது தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
    • தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று நாய் கடித்து குதறுகிறது.
    • தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது 134-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் உமா சரமாரி கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    சென்னையில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடித்து குதறுகிறது. சிறுவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கருத்தடை செய்த பிறகும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிப்பது ஏன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    புதியமன்ற கூட்டம் கூடிய பிறகு தெரு நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தெரு நாய்களின் இன உற்பத்தியை தடுக்க சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்படுகிறது. கண்ணம்மாபேட்டை கால்நடை மருத்துவ மையத்துக்கு ரூ.7 கோடி, லாயிட்ஸ் காலனியில் உள்ள மையத்துக்கு ரூ.6 கோடியே 64 லட்சம், புளியந்தோப்பில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் கிளை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது. வாரத்திற்கு 400 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பேரூர் ரோட்டில் நாய்களை தேடி சென்றார்.

    கோவை -

    கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 47). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

    அவர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து பார்த்து வருகிறார். அதனால் நெரு நாய்கள் எந்த நேரமும் அவரை சுற்றி வரும். நேற்று வழக்கம் போல நாய்களுக்கு உணவளிக்க பாபுராஜ் சென்றார்.

    வெகு நேரமாக அவர் உணவுடன் நாய்களுக்காக காத்திருந்தார். ஆனால் ஒரு சில நாய்கள் மட்டுமே வந்தது. மற்ற நாய்கள் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் நாகராஜபுரத்தில் இருந்து பேரூர் ரோட்டில் நாய்களை தேடி நடந்து சென்றார்.

    அப்போது அங்கங்கே அவர் வளர்த்து வந்த 5 நாய்கள் இறந்த கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களின் அருகே சென்று பார்த்தார். அதில் மர்ம நபர்கள் யாரோ நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாபுராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×