search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும்
    X

    மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.

    தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும்

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    Next Story
    ×