search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"

    • கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
    • வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.8 மீட்டர் முதல் 3.3 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வயநாடு மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தும் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான தள செயல்பாடுகளுக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    கனமழையால் மண் சரிந்து சாலையில் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து இருப்பதால் மானந்தவாடி-கைதக்கல் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.

    • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வட மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • யமுனை ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது
    • தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், மீண்டும் கனமழை மிரட்டி வருவதால் வெள்ள அபாயம் நீங்கவில்லை

    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் மக்களை செல்பி எடுக்கவோ அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

    நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் குளித்த 3 சிறுவர்கள், பள்ளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி வந்த ஒரு நாளுக்குப் பிறகு முதல்வரின் வேண்டுகோள் வந்திருக்கிறது.

    அவர் டுவீட் செய்திருப்பதாவது:-

    சிலர் விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வெள்ள நீரில் செல்வதாக பல இடங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். நீங்கள் உயிரிழக்க நேரிடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் வலிமையானது. நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    சாந்திவன் பகுதியில் குழந்தைகள் வெள்ளத்தில் விளையாடும் ஒரு வீடியோவை இணைத்து பதிவிட்ட கெஜ்ரிவால், "இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும்" என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் யமுனை நதியில் நீர்மட்டம் ஆபாய கட்டத்தை தாண்டியது. இதனால் புதுடெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 208.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், இன்று காலை 10 மணியளவில் 207.48 மீட்டராக குறைந்துள்ளது. இருப்பினும் அபாய கட்ட அளவை (205.33 மீட்டர்) தாண்டி 2 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.

    இந்திர பிரஸ்தா பகுதி ரெகுலேட்டரில் (வடிகால் சீராக்கும் கருவி) ஏற்பட்ட உடைப்பினால், நகரின் ஐடிஓ (ITO) அருகே உள்ள பகுதி மற்றும் ரிங் ரோடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாந்திவனில் இருந்து கீதா காலனி வரையிலான ரிங் சாலையின் இரு பாதைகளிலும் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இதர இலகு ரக வாகனங்கள் செல்ல டெல்லி போக்குவரத்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், சாந்திவனில் இருந்து ராஜ்காட் மற்றும் ஐஎச்பிடி (ISBT) நோக்கி செல்லும் சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.

    • அசாமில் காய்கறி விலை உயர மியா வியாபாரிகள்தான் காரணம் என அம்மாநில முதல்வர் விமர்சனம்
    • எதற்கெடுத்தாலும் அவர்களை குறை கூறுவதா? என ஒவைசி கடும் விமர்சனம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

    மழை காரணமாக காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் மியா என்று உள்ளூரில் மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ''காய்கறிகளை இவ்வளவு விலைக்கு உயர்த்தியது யார்? காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் மியா வியாபாரிகள். அசாம் மாநில மக்கள் காய்கறிகள் விற்பனை செய்திருந்தால், அவர்கள் விலைவாசியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு முன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அடிக்க மியா சமூகத்தினரை வகுப்புவாத அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அசாம் மக்களுடைய கலாசாரம், மொழியை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

    ஹிமாந்தா பிஸ்மா சர்மாவின் மியா குறித்த கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றியுள்ளார்.

    அவர் பதவிட்டுள்ள டுவிட்டரில் ''அசாமில் சில குரூப்புகள் உள்ளன. அவர்களின் வீட்டு எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிட வில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்'' என்றார்.

    வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என பா.ஜனதாவினர் கூறி வரும் நிலையில், தற்போதைய நிலையில் அவர்களிடம் தக்காளி, கீரை, உருளைக்கிழக்கு உள்ளிட்டவைகள் கேட்டு நிர்வகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் நாட்டிற்கு மோடி பயணம் செய்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் குறைந்தது. ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு குறைவாக சரிந்தது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக பலத்த மழையும் பெய்தது.

    இதனால் அணைக்கு செல்லும் முத்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் அப்படியே அணைக்கு வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர தொடங்கியது.

    மெல்ல மெல்ல உயர தொடங்கிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12 அடியாக உயர்ந்தது. வரும் நாட்களில் இன்னும் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளதால், அங்கிருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடியில் இருந்து 7 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் வரை பருவமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
    • தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து தொட்ட காஜனூர் செல்லும் சாலையில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சாலையில் இருபுறம் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இன்று காலை பள்ளி -கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், வியாபாரத்துக்கு சென்ற வியாபாரிகள், வேலைக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே பலத்த சூறாவளி காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழக- கர்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    தமிழக-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து ஆசனூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தாளவாடி- 24, சத்தியமங்கலம் - 6, கொடுமுடி - 6, கோபி - 2.

    • இன்று 115 முதல் 204 மி. மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது
    • நிலச்சரிவு, ஆற்றில் வெள்ளம், சாலைகள் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பேய்மழை பெய்தது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாநில சாலைகள், 10 லிங்க் ரோடு சேதமடைந்து போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மந்தாகினி, அலாக்நந்தா அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோன்பிரயாக், கவுரிகுண்ட் பகுதியில கேதர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 115 முதல் 204 மி. மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    உத்தரகாண்ட் கனமழை குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில் ''ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது நாம் இயற்கை பேரழிவை எதிர்கொண்டு வருகிறோம். அதிக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படடுள்ளது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. நாம் முழு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

    அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநில பேரிடர் மீட்புக்குழு அவர்களுடைய வேலையை திறம்பட செய்து வருகிறாரக்ள். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    மற்ற அமைப்புகளும் பணியில் இறங்கியுள்ளனர். பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாராக உள்ளோம்'' என்றார்.

    • தென்மேற்கு பருவமழையால் வடஇந்தியாவில் பேய்மழை
    • இமாச்சல பிரதேசம், டெல்லியில் எங்குபார்த்தாலும் வெள்ளம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலும் நீர்மட்டம் ஜெட்வேகத்தில் உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்டு தடுப்பணையை அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை காரணமாக திறந்து விட்டது.

    இதனால் டெல்லி மாநிலத்தில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை 205.33 மீட்டரை தாண்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய ரெயில் பாலம் அருகில் 206.28 மீட்டரை தாண்டியது. இன்று மதியம் 206.65 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் ''வெள்ள அபாயம் மோசமான நிலையில்தான் உள்ளது. ஆனால், அரசு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. 206 மீட்டரை தாண்டும்போது மக்களை வெளியேற்றும் பணி தொடரும்'' என்றார்.

    கிழக்கு டெல்லியின் சில இடங்களில் நேற்றிரவில் இருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றி வருகின்றனர். அதிகாரி ஒருவர் ''பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்'' என்றார்.

    ஹரியானா மாநிலம் 3 லட்சம் கனஅடி நீரை திறந்து விடுவதால் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 352 கனஅடி நீர்தான திறந்து விடப்படும். தற்போது அதிகமாக திறந்து விடப்ப்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெல்லியை வந்தடையும்.

    ஏற்கனவே, வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 16 கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து கண்காணித்து வருகிறது.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியது யமுனை ஆறு. டெல்லியில் சுமார் 41 ஆயிரம் மக்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    யமுனை ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் அளவு (206.38) அபாயம் கட்டத்தை எட்டியது. 2019-ல் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ந்தேதிகளில் 8.28 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 206.6 மீட்டர் அளவை எட்டியது. 2013-ல் 207.32 மீட்டரை தொட்டது.

    ×