search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வீரர்கள்"

    • நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.

    கன்னியாகுமரி ;

    மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் சண்முக சுயம்பு.இவரது மனைவி சரசம் (வயது 75).

    இவர் நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி செல்லும்போது குளித்துவிட்டு வீடு திரும்பிய வேறு ஒரு பெண் சரசம் நீரில் முழ்கியதாக தகவல் தெரிவித்தார்.உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.

    தகவலறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக தீயணைப்பு துறை சார்பில் தியாகராய நகரில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

    உஸ்மான் சாலை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் பேரணியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ரவி தொடங்கி வைத்தார்.

    தீயணைப்புத் துறை அதிகாரிகள், வீரர்கள், பள்ளி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பர்கிட் சாலை வழியாகச் சென்ற பேரணி ராமகிருஷ்ணா பெண்கள் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.

    முன்னதாக டி.ஜி.பி. பி.கே.ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாநிலம் முழுவதும் 1,610 கல்வி நிலையங்கள், 1,120 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே போல், தீயணைப்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
    • 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.
    • பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி திரிந்த ஒரு தெருநாய் அங்குள்ள பிரதாப் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பின்னர் வெளியே செல்ல வழியை தேடியபோது வீட்டின் சுற்றுச்சுவரில் துளை இருப்பதை கண்டது. உடனே அந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து தலையை நுழைத்துள்ளது. ஆனால் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அதாவது நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.

    இதனால் முன்னோக்கி செல்ல முடியாமலும், தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் நாய் பரிதவித்தது. ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்தது.

    நேற்று காலையில் பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சுவரின் துளையை சற்று பெரிதாக உடைத்து நாயை மீட்டனர்.

    சுவரில் இருந்து விடுதலையான மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்து சந்தோசத்துடன் ஓடியது.

    • விருத்தாசலம் அருகே குட்டையில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டது.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்த ராஜதுரை (வயது.46), விவசாயி. இவருடைய பசு மாடு ஒன்று, மங்கலம்பேட்டையில், விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் உள்கதவை தாழ்ப்பாள் போட்ட குழந்தை.
    • திருப்பூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கே.பி.பி. கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கனிஷ்கா என்ற குழந்தை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் உள்கதவை தாழ்ப்பாள் போட்டாள். இதையடுத்து கதவை திறக்க முடியாமல் தவித்துள்ளாள்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கதவு தாழ்ப்பாளை உடைத்து குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

    இந்த போட்டியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 150-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் துறை சார்ந்த போட்டிகளான அணி வகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போட்டி போன்ற போட்டிகளும், உடல் திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து, போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த மண்டல விளையாட்டுப் போட்டிகளை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் போலீஸ் ஆயுதப்படை டி.எஸ்.பி பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன், முரளி, பாலசுப்பிரமணி, அப்துல் பாரி, லட்சுமி நாராயணன், ஹார்னீஷா பிரியதர்ஷினி, சையத் முகமது ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விளையாட்டு போட்டி நாளை வரை நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    • தெரு நாய்கள் விரட்டியதால் புள்ளிமானை கிணற்றில் விழுந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பாளையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி புள்ளிமான் வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டியது. இதில் பயந்த அந்த மான் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை பாது காப்பாக உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மான் வனத்துறை அதிகாரி களிடம் ஒப்படை க்கப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது

    • தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சயன் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் கதிரவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×