என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி
- தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.
இந்த போட்டியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 150-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் துறை சார்ந்த போட்டிகளான அணி வகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போட்டி போன்ற போட்டிகளும், உடல் திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து, போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மண்டல விளையாட்டுப் போட்டிகளை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் போலீஸ் ஆயுதப்படை டி.எஸ்.பி பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன், முரளி, பாலசுப்பிரமணி, அப்துல் பாரி, லட்சுமி நாராயணன், ஹார்னீஷா பிரியதர்ஷினி, சையத் முகமது ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டி நாளை வரை நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.






