search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலூர் தீ விபத்து: காயமடைந்த வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல்
    X

    தீ விபத்தில் காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய டி.ஜி.பி. ரவி.

    கப்பலூர் தீ விபத்து: காயமடைந்த வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல்

    • கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
    • 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×