search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firemen"

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது.
    • மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. புதுச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டாராத்தில் உள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சினை இயக்க டிரைவர் கணபதி வந்து, அவரது இருக்கையில் அமர்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்கினார். அப்போது அவரது காலடியில் 10 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு படுத்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.

    உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கணபதி, பஸ்சிலிருந்த பயணிகளையும் எச்சரித்து கீழே இறக்கினார். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். டிரைவர் கணபதி இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். டிரைவர் பார்த்ததாக கூறிய கண்ணாடி விரியன் பாம்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாம்பு இருந்ததாக கூறப்பட்ட பஸ்சினை பணிமனைக்கு எடுத்து சென்று பாம்பு பிடி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு ஓட்டமானது ராமநாதன் ரவுண்டானா, வழியாக மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது.

    தஞ்சாவூர்:

    பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் 20-ந் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று முதல் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இரண்டாம் நாளான இன்று தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் உதவி மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நிலைய அலுவலர்கள் பொன்னுசாமி, பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சை தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டமானது பழைய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா, குந்தவை நாச்சியார் கல்லூரி, மேம்பாலம், பெரிய கோவில், ராஜ வீதிகள் வழியாக மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது.

    செல்லும் வழியில் பொது மக்களுக்கு, தீ விபத்து நடைபெறாமல் தடுப்பது எப்படி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது எப்படி, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.

    ×