என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
    X

    மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்ட போது எடுத்த படம்.

    சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

    • பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    Next Story
    ×