search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வீரர்கள்"

    • நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர்.

    நாகர்கோவில்:

    குழந்தைகள் முதல் சிறுவர்-சிறுமிகள் வரை பலரும் காற்று காலத்தில் பட்டம் விட்டு விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டு சில நேரங்களில் வினையாக மாறி உயிர்ப்பலியும் வாங்கி வருகிறது. குறிப்பாக பட்டம் உயரத்தில் பறக்க சிலர் பயன்படுத்தும் மாஞ்சா கயிறு தான் உயிர்பலிக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

    மனிதர்கள் மட்டுமே, பட்டம் விடும் நூலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், காகம் ஒன்றும் அதில் சிக்கி பறக்க முடியாமல் தவிப்புக்கு உள்ளானது. மரக்கிளையில் நின்று கொண்டு அது கரைந்து கொண்டே இருப்பதை பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காகத்தை மீட்டனர். இது நடந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.

    இந்த மாவட்டத்தில் மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சார்ந்த பகுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் பறவை இனங்கள் அதிகமாக காணப்படுகின்றன. நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள வாத்தியார்பிள்ளை பகுதியில் வசிப்பவர் கோபாலன். இவரது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் இருந்து காகம் ஒன்று விடாமல் கரைந்துகொண்டே இருந்தது. கூடி வாழும் பழக்கம் கொண்ட காகங்கள், அங்கு கூட்டம் சேர்ந்து சக தோழனின் உதவிக்கு வந்தன.

    ஆனால் அவற்றால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தொடர்ந்து மரக்கிளையில் இருந்த காகம் கரைந்து கொண்டே இருக்க தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தனர். எதற்காக காகம் கரைகிறது என அவர்களுக்கும் முதலில் தெரியவில்லை.

    நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர் ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் ஏறி, காகத்தை பிடித்தார். அதன் கால்களில் சுற்றப்பட்டிருந்தது, சிறுவர்கள் பட்டம் விட பயன்படுத்தும் நைலான் கயிறு என அப்போது தெரியவந்தது. அது இறுக்கியதால் பறக்க முடியாமல் காகம் கரைந்துள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர். அதன்பிறகு காகம் சுதந்திர வானில் சிறகடித்துச் சென்றது.

    • திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர்.

    திருவொற்றியூர், காலடிப்பேட்டை வன்னியர் தெருவில் உள்ள மரத்தில் அறுந்து தொங்கிய மாஞ்சா நூலில் ஒரு காகம் சிக்கி உயிருக்கு போராடியது.

    இது குறித்து அவ்வழியே சென்ற குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் காகத்தை காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த காகம் மரத்தில் சுமார் 35 அடி உயரத்தில் தொங்கியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதுகுறித்து திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பறக்க விட்டனர்.

    • இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது.
    • மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. புதுச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டாராத்தில் உள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சினை இயக்க டிரைவர் கணபதி வந்து, அவரது இருக்கையில் அமர்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்கினார். அப்போது அவரது காலடியில் 10 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு படுத்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.

    உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கணபதி, பஸ்சிலிருந்த பயணிகளையும் எச்சரித்து கீழே இறக்கினார். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். டிரைவர் கணபதி இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். டிரைவர் பார்த்ததாக கூறிய கண்ணாடி விரியன் பாம்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாம்பு இருந்ததாக கூறப்பட்ட பஸ்சினை பணிமனைக்கு எடுத்து சென்று பாம்பு பிடி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.
    • காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவரது கூரை வீடு மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த மனவளப் பெருமாள்வீடும் எரிந்து சாம்பலானது. இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
    • கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு தாய் நாய் சாக்கடை கால்வாய்க்குள் உள்ளே சென்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பின்னா் மேலே வருவதுமாக இருந்துள்ளது. மேலும் கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் சாக்கடை கால்வாய் அருகில் சென்று சிமெண்ட் சிலேப் போட்டு மூடப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

    அதன் பேரில் நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாக்கடை கால்வாய் சந்தில் கையை விட்டு 6 நாய் குட்டிகளையும் மேலே எடுத்து வெளியே விட்டனா். அப்போது தாய் நாய் அருகிலேயே நின்று பாா்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் அனைத்தும் மேலே வந்ததும் அனைத்து குட்டிகளையும் அழைத்து கொண்டு சென்றது. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

    • நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர்.

    இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நீத்தார் நினைவாக வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீ தொண்டு வாரம் நேற்று முதல் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும் என்று நிலைய அலுவலர் கூறினார்.

    • டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா்.
    • தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் பங்களாபுதூா் சாலை பகுதியை சோ்ந்தவா் விவேக் (வயது 31). இவா் காங்கயம் நகரம் கோவை சாலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது வீட்டின் அருகே ஒரு டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா். இதற்காக டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பணி மேற்கொண்டிருந்தாா்.

    அப்போது ஏற்பட்ட கோளாறால் டிராக்டா் திடீரென நகா்ந்து முன்னால் இருந்த சுவரின் மீது மோதி நின்றது. இதில் டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவேக்கின் ஒரு கால் சக்கரத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.

    இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து விவேக்கை மீட்க முயற்சித்தனா். ஆனால் டிராக்டரை நகா்த்த முடியாததால், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

    பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான 6 தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

    • நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.
    • இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.தீ மள மளவென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது.

    இது பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்தது.இதை யடுத்து திங்கள் சந்தை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டு அங்கி ருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடியும் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை..

    இன்று 2-வது நாளாக தீ எரிந்து கொண்டே உள்ளது. அதை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இன்று மாலைக்குள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீய ணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமச்சந்திரன் வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவரது வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு, வெளியே வந்தனர். மேலும் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • கணேசன், திடீரென மாயமானார்
    • அவரது செருப்பு கிணற்றில் மிதந்தது

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி ராசா கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). காங்கிரஸ் பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற கணேசன், திடீரென மாய மானார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடினர். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. மேலும் அவரது செருப்பு கிணற்றில் மிதந்தது. அதிர்ச்சி அடைந்து உறவினர்கள், கிணற்றில் பார்த்தபோது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உறவினர்கள் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கயிற்றைக் கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி கணேசனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் விசாரணை நடத்தியதில், கோவிலுக்கு வரி கொடுத்துவிட்டு தோட்டத்திற்கு சென்று அவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைந்திருந்ததை அறியாமல் கிணற்றில் தவறி விழுந்தார்.

    இதைகண்ட அருகில் இருந்த டீக்கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்கிய வீரர்கள் முதிவரை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அதன்பின் அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் விழுந்த முதியவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பசீர் (55) என தெரியவந்தது. ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    கடந்த 1 வாரத்திற்கு முன்பு பசீர் அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் எரவா ஞ்சேரி ஊராட்சி துறையூ ரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலத ண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×