search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"

    • ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா வருகிற 16-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

    ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும்போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெ றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    வருகிற 16-ந் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • திருப்பதி கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பதியில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. கணிசமாக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர். 23,491 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ரோஜாவை ஜெய் அமராவதி என கோஷமிட வலியுறுத்தினர்.
    • ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இருந்து வெளியில் வந்தார்.

    அப்போது, தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்யும் பெண் தன்னார்வலர்கள் அவரை முற்றுகையிட்டனர்.


    அமராவதியை ஆந்திர தலைநகராக மேம்படுத்த வலியுறுத்தி, 'ஜெய் அமராவதி' என கோஷமிட்டனர். மேலும் ரோஜாவை ஜெய் அமராவதி' என கோஷமிட வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.


     இதையடுத்து அமராவதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இதனால், அப்போதிருந்து 'ஜெய் அமராவதி' என தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    இருப்பினும் தலை நகரங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் மந்திரி ரோஜாவை தன்னார்வலர்கள் சூழ்ந்து, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பினர்.

    சிரித்துக்கொண்டே ரோஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
    • 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.

    7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
    • சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பி தரிசனம் வைப்பது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    சில நாட்களில் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக தினமும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் அவர்களின் வாகனங்களை போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத இடங்களில் பார்க்கிங் செய்வது, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.


    விரைவில் திருப்பதிக்கு வர உள்ள அயோத்தி தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் சமையலறை, பிரசாதம் விநியோகிக்கும் முறைகள் மேலும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 61,135 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    விடுமுறை முடிந்ததால் நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அளவு குறைந்தது. இதனால் 8 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 61,135 பேர் தரிசனம் செய்தனர். 19,004 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது.

    திருப்பதி:

    அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி வந்தார். இரவு வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசித்தார்.

    பிறகு மாட வீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார்.

    இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

    சாமி தரிசனம் செய்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை என்பது செவ்வாய்கிழமை மட்டுமே இந்த தரிசன நடைபெறும்.

    அரை மணி நேரம் நிதானமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்கு ஒரு நபருக்கு 1250 ரூபாய் கட்டணமாகும்.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அனைவரும் தரிசனம் செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை தான் கடைபிடிக்கப்படுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது. அவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
    • பிப்ரவரி மாதம் 3, 4, 5-ந் தேதிகளில் திருப்பதி மலையில் ஆன்மிக மாநாடு நடக்க இருக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து கருணாகர ரெட்டி கூறியதாவது:-

    தேவஸ்தானத்தின் 2024-25-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் திட்டத்தை அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டு வந்தனர். ரூ.5 ஆயிரத்து 141 கோடியே 74 லட்சம் மதிப்பிலான வரவு செலவு திட்டத்துக்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு ரூ.ஆயிரத்து 611 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தி உள்ளனர் அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கிகளில் தேவஸ்தானம் செய்துள்ள நிரந்தர டெபாசிட்டுகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 68 கோடியே 51 லட்சம் வட்டி வருவாய் கிடைத்தது. அடுத்த நிதியாண்டில் வட்டி வருவாய் ரூ.ஆயிரத்து 167 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.


    நடப்பு நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் ரூ. 550 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.600 கோடி ரூபாய் கிடைக்கும்.

    தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.328 கோடி கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டும். அதே நிலை தொடரும், கட்டண சேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.140 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.150 கோடி வரை கிடைக்கும்.

    ஊழியர்களின் சம்பளத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 664 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் சம்பளத்துக்கு ஆயிரத்து ரூ. 733 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

    பிப்ரவரி மாதம் 3, 4, 5-ந் தேதிகளில் திருப்பதி மலையில் ஆன்மிக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க 57 பீடாதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.
    • தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இனி 5 கிராம், 10 கிராம் எடையில் 4 வகையான மாதிரிகளில் திருமணத்துக்கான தங்க (மாங்கல்யம்) தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

    கடந்த காலங்களில் கல்யாண மஸ்து என்ற பெயரில், தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

    அவர்களுக்கு 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.

    ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்க தாலிகளின் மகிமை காரணமாக, 32 ஆயிரம் தம்பதிகளில் ஒருவரும் மதம் மாறவில்லை என தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர். 33, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    நாளை காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இந்த டிக்கெட்டுகளை வரும் 20-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    இதே போல் வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் 750 பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 23-ந் தேதி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதே போல் அன்று மாலை தங்கும் விடுதி முன்பதிவு தொடங்குகிறது.

    இந்த வசதியினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 73,016 பேர் தரிசனம் செய்தனர். 20,915 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர்.
    • பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர்.

    நேற்று ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.


    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    ×