என் மலர்
இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது... 8 மணி நேரத்தில் தரிசனம்
- கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- திருப்பதியில் நேற்று 61,135 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விடுமுறை முடிந்ததால் நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அளவு குறைந்தது. இதனால் 8 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 61,135 பேர் தரிசனம் செய்தனர். 19,004 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story






