search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய் அமராவதி"

    • ரோஜாவை ஜெய் அமராவதி என கோஷமிட வலியுறுத்தினர்.
    • ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இருந்து வெளியில் வந்தார்.

    அப்போது, தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்யும் பெண் தன்னார்வலர்கள் அவரை முற்றுகையிட்டனர்.


    அமராவதியை ஆந்திர தலைநகராக மேம்படுத்த வலியுறுத்தி, 'ஜெய் அமராவதி' என கோஷமிட்டனர். மேலும் ரோஜாவை ஜெய் அமராவதி' என கோஷமிட வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.


     இதையடுத்து அமராவதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இதனால், அப்போதிருந்து 'ஜெய் அமராவதி' என தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    இருப்பினும் தலை நகரங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் மந்திரி ரோஜாவை தன்னார்வலர்கள் சூழ்ந்து, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பினர்.

    சிரித்துக்கொண்டே ரோஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர்.
    • அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு விரைவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார்.

    அப்போது அமராவதியை தலைநகராக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்தனர்.

    அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர் காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார். மேலும் அமராவதிக்கு தான் தனது ஆதரவு என்று கூறி ஜெய் அமராவதி என முழக்கமிட வற்புறுத்தினர்.

    அதற்கும் அவர் மறுத்து கண்டிப்பாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இருக்கும் என கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். இதன் காரணமாக அமராவதி போராட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×