search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் புத்தாண்டு"

    • கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
    • தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.

    நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.

    தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகபூஜை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில்உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்படிபல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில்,முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவிலில் முத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளால் அபிஷேகபூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதே போல பல்லடம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனை பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது.
    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மகாபாரதி புத்தாண்டை கொண்டாடினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பாலயம் காப்பகம் இயங்கி வருகிறது.

    இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் பழங்கள் உள்ளிட்டவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினார்.

    மேலும் இந்த குழந்தைகள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள் கைத்தறி ஆடைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் அன்பாலய குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி அன்பாலய நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    • ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.

    கோவை:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

    சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிறப்பு மிக்க ராமபிரான் கோவில் உள்ளது.

    இங்கு அனைத்து விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

    இதனைதொடர்ந்து இன்று தமிழ்வருட பிறப்பு முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி உடன் கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு தவன பந்தலின் கீழ் ஸ்ரீ ராமசுவாமிக்கு விசேஷ பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தனத்தால் ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோல விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பன்னீர் புஷ்பத்தால் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டு ராஜோபசார பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையானது நடைபெற்றது.

    இதில் நெல்வாய் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி முர்மு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு.
    • தமிழ்மொழி பேசும் தமிழர்களாய் வாழ்ந்து நாம் பிறந்த தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடுவோம்.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டபோது மனமுடைந்த நிலையில், உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின் படியும், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாள் என்பதை புரட்சித் தலைவி அம்மா மீண்டும் உறுதி செய்ததை, இந்த இனிய நன்நாளில் பெருமையோடு கட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

    புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழகத்தைப் படைத்திடுவோம் என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    சசிகலா:- சித்திரை திங்கள் முதல் நாளை, தமிழ் புத்தாண்டு நாள் என புரட்சித்தலைவி அம்மாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவதை இத்தருணத்தில் எண்ணி மகிழ்கிறேன்.

    இந்த சிறப்புமிக்க நன்னாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று, வேற்றுமைகள் அகன்று, அன்பாய் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ பிரார்த்திக்கின்றேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை.

    அதற்கேற்ற வகையில் தமிழர்களின் வாழ்க்கையில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்கட்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்.

    உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவும் தமிழ்நாடும், தமிழ் மக்களும், அனைத்து நற்செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்ந்து சிறந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தமிழ்மொழி பேசும் தமிழர்களாய் வாழ்ந்து நாம் பிறந்த தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடுவோம். தமிழர்கள் வீழ்ந்தால் முட்டுக்கொடுப்போம். அதே போன்று தமிழர்கள் வாழ்ந்தால் தட்டிக்கொடுப்போம் என்கிற உணர்வோடு வாழ்ந்து தமிழ்மொழிக்கும். தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட இப்புத்தாண்டு அருள் புரிய வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

    தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    தமிழ் மாதங்களின் முதல் மாதமாக தலைமை வகிக்கிறது சித்திரை. சித்திரையின் முக்கியத்துவம் கோயில், குளங்களின் கொண்டாட்டங்கள், ஆடல், பாடல்கள், கிராமத்து நாடகங்கள் விமரிசையாக நடைபெறும். சிவாலயங்களில், அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடப்பது தமிழகத்துக்கே உரிய பெருமைமிகு அடையாளங்களாகும்.

    இத்தமிழ்ப் புத்தாண்டு தினத்திலே எல்லோருடைய உள்ளங்களும் இல்லங்களும் இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் நிறைவு காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வாழ்த்தி மகிழ்கின்றேன்.

    இளவேனில் காலம் நிறைவு பெற்று முதுவேனில் காலம் முகிழ்த்துக் கிளம்பும் நாளை சித்திரைத் திருநாளாக தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    தமிழகத்திலும்-தமிழ் ஈழத்திலும் தரணி முழுவதிலும் வாழ்கின்ற நம் மக்கள் அனைவருக்கும் இதயம் இனித்திடும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா:-

    இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என வாழ்த்தி, எனதருமை தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி நிறைந்து, வாழ்வில் வளம் செழித்து, ஆரோக்கியமும், செல்வமும் நிறைவுபெற்று, தமிழரின் எதிர்காலம் ஒளிமயமாக சிறந்து விளங்க என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனித்துவமான, அர்த்தமுள்ள தமிழ் புத்தாண்டு தமிழர்களின் வாழ்வில் புத்தொளி ஏற்றவும், அவர்கள் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் பண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில் குமார், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டாக்டர் மணி அரசன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

    14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

    தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

    • இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது.
    • அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத இறுதியில் மகோற்சவ விழா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று லட்சதீப விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் காலையில் ஆஞ்சநேயர் சாமிக்கு திருமஞ்சனமும், இரவில் சாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 

    மேலும், வருகின்ற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் லட்ச தீப விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தொடர்ந்து அன்று மாலை 8 மணியளவில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×