search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிம்பிள் யாதவ்"

    • மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-

    புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.

    இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
    • 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

    உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.

    2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
    • 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

    மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவையில் 2 பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
    • இதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். ஒருவர் சபாநாயகரை நோக்கி ஓடினார். இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

    அதன்பின், பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

    இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது.

    இந்நிலையில், இதுகுறித்து சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் கூறுகையில், தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

    கடந்த 2001ல் பாராளுமன்றம் மீது நடந்த தாக்குதலில் 14 போலீசார் வீர மரணம் அடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

    • பீகார் மாநிலம் குர்கானி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கேதர்பிரசாத் குப்தா வெற்றி பெற்றார்.
    • இடைத்தேர்தலில் ராம்பூர் தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் டிசம்பர் 5-ந்தேதி நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த ஒரு எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு:-

    சமீபத்தில் உடல்நலக்குறைவால் சமாஜ்வாடிக்கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் எம்.பி. மரணம் அடைந்ததால், உத்தரபிரதேச மாநிலத்தில், மெயின்புரி தொகுதி காலியானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவின் மருமகளும், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ரகுராஜ் சிங் ஷாக்யா நிறுத்தப்பட்டார்.

    இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 88 ஆயிரத்து 461 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதனால் அந்த தொகுதியை சமாஜ்வாடி கட்சி தக்க வைத்துக்கொண்டது.

    * உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் வெறுப்புணர்வு பேச்சு வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் இந்த தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. அந்தக் கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, தனக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாடி கட்சியின் முகமது ஆசிம் ராஜாவை 34 ஆயிரத்து 136 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * அதே மாநிலத்தில் கட்டாவ்லி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. விக்ரம் சிங் முசாப்பர் நகர் கலவர வழக்கில் 2 ஆண்டு தண்டனையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் மறைந்த அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி வேட்பாளர் மதன் பய்யா வெற்றி பெற்றார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமாரியை 22 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * ராஜஸ்தான் மாநிலம், சர்தார் சஹார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வர்லால் சர்மா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால், அங்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் சர்மா வெற்றி பெற்றார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் அசோக் குமாரை சுமார் 26 ஆயிரத்து 852 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    * ஒடிசா மாநிலம், பதம்பூர் தொகுதி பிஜூஜனதாதளம் எம்.எல்.ஏ. பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா மரணம் அடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பிஜூஜனதாதளம் வேட்பாளர் பார்ஷா சிங் பரிஹா வெற்றி பெற்றார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் பிரதீப் புரோகித்தை 42 ஆயிரத்து 679 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    * பீகார் மாநிலம், குர்கானி தொகுதி ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ. அனில்குமார் சஹனி, மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதி காலியாகி இடைத்தேர்தல் நடந்தது. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கேதர்பிரசாத் குப்தா 3 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்டிர ஜனதாதளம் கூட்டணி வேட்பாளர் மனோஜ் சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * சத்தீஷ்கார் மாநிலம், பானுபிரதாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சிங் மாண்டவி மறைவால் தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மனோஜ் மாண்டவி, 21 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பிரேமானந்த் நேத்தமை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இடைத்தேர்தல் நடந்த 6 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்தளமும், பிஜூ ஜனதாதளமும் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி வேட்பாளர் அனில்குமார் சர்மா 24,404 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
    • ராஷ்டிரிய லோக்தந்தரிக் கட்சி வேட்பாளர் லால்சந்த் 15,713 ஓட்டுகளும் பா.ஜனதா வேட்பாளர் அசோக்குமார் 15,495 ஓட்டுகளும் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் கடந்த அக்டோபர் 10-ந்தேதி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது எம்.பி. தொகுதியான மெய்ன்பூரி கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.

    மெய்ன்பூரி எம்.பி. தொகுதியில் மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். பா.ஜனதா சார்பில் ரகுராஜ் சிங் நிறுத்தப்பட்டார்.

    இந்த எம்.பி. தொகுதி இடைத்தேர்தலுடன் 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் ராம்பூர், கதவுலி, ஒடிஷாவில் உள்ள பதம்பூர், ராஜஸ்தானில் உள்ள சர்தர்ஷாகர், பீகாரில் குர்ஹானி மற்றும் பானு பிரதாப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய சட்டசபை தொகுதிக்கும் 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    மெய்ன்பூரி தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் முன்னிலையில் இருந்தார். அவர் பா.ஜனதா வேட்பாளரை விட 1,400 வாக்குகள் கூடுதல் பெற்று இருந்தார்.

    நேரம் செல்ல செல்ல அவர் அதிகமான ஓட்டுகளை பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றார்.

    12.30 மணி நிலவரப்படி டிம்பிள் யாதவ் 1.40 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 50, 744 வாக்குகள் பெற்று இருந்தார். பா.ஜனதா வேட்பாளர் ரகுராஜ் சிங் 1,05,014 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

    இதனால் இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுகிறார். இதன் மூலம் மெய்ன்பூரி தொகுதியை சமாஜ்வாடி தக்க வைத்துக் கொள்கிறது. 1996-ம் ஆண்டு இருந்து சமாஜ்வாடி அந்த தொகுதியில் தோற்கவில்லை.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த 2 சட்டசபை இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியே முன்னிலையில் இருக்கிறது.

    ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரும், ஆசம்கானுக்கு நெருக்கமானவருமான அசிம் ராஜா 13,080 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜனதா வேட்பாளர் சக்சேனா 6,903 ஓட்டுகள் பெற்று பின்தங்கி இருந்தார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கதவுலியில் சமாஜ்வாடியின் கூட்டணியான ராஷ்டிரிய லோக்தளம் கட்சி முன்னிலையில் உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி வேட்பாளர் அனில்குமார் சர்மா 24,404 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ராஷ்டிரிய லோக்தந்தரிக் கட்சி வேட்பாளர் லால்சந்த் 15,713 ஓட்டுகளும் பா.ஜனதா வேட்பாளர் அசோக்குமார் 15,495 ஓட்டுகளும் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பீகார் மாநிலம் குர்ஹானி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் மனோஜ்சிங் குஷ்வாகா 49,435 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜனதா வேட்பாளர் குப்தா 47,810 ஓட்டுகள் பெற்று உள்ளார்.

    ஒடிசா மாநிலம் பதம் பூரில் ஆளும் பா.ஜனதா தளம் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி 10 சுற்று முடிவில் 54,173 ஓட்டுகள் பெற்று இருந்தது. பா.ஜனதாவுக்கு 34,748 வாக்குகள் பெற்று பின்தங்கி இருந்தது.

    சத்தீஷ்கர் மாநிலம் பானு பிரதாப்பூரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

    மொத்தம் உள்ள 6 சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ்-2, சமாஜ் வாடி-1, ஐக்கிய ஜனதாதளம்-1, பிஜூ ஜனதா தளம்-1, ராஷ்டிரிய லோக்தளம்-1 ஆகியவை முன்னிலையில் உள்ளன.

    பா.ஜனதா ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. அந்த கட்சிக்கு இடைத்தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது.

    அந்த மக்களவை தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், டிம்பிள் யாதவ் தனது கணவர் அகிலேஷ் யாதவுடன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மெயின்புரி மக்களின் ஆசிகள் என்றும் உண்டு என தெரிவித்தார்.

    மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ்.
    • இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    லக்னோ :

    உ.பி.யில் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது. அந்த மக்களவை தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (வயது 44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    அவர் தனது வேட்பு மனுவை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார் என மெயின்புரி மாவட்ட சமாஜ்வாடி கட்சித்தலைவர் அலோக் ஷாக்யா தெரிவித்தார்.

    தனது மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2019 தேர்தலில் இந்தத் தொகுதியில் முலாயம் சிங் யாதவ், தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யாவை 94 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 12.13 லட்சம் வாக்காளர்களில் 35 சதவீதத்தினர் யாதவ் சமூகத்தினர், எஞ்சியவர்கள் ஷாக்யா, தாக்குர், பிராமணர்கள், தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை. முலாயம் சிங் யாதவின் இன்னொரு மருமகளான அபர்ணா யாதவை பா.ஜ.க. நிறுத்தக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவபால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி லோகியா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனவா, இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை.

    டிம்பிள் யாதவ், கடந்த முறை கன்னாஜ் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரத் பதக்கிடம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது.

    டிம்பிள் யாதவ், முலாயம் சிங் யாதவுக்கு ஈடானவர் அல்ல, முலாயம் சிங் யாதவ் வானம் என்றால், டிம்பிள் யாதவ் பூமி. இங்கு பா.ஜ.க. வெற்றி பெறும் என மாநில பா.ஜ.க. மந்திரி ஜெய்வீர் சிங் தெரிவித்தார்.

    ×