search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"

    • கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
    • 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    கோவை:

    தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கோவை மண்டல மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ.டி. அலுவலகத்தில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதையொட்டி கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தின் முதன்மை ஆணையர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் வரி வருவாய் 2017-ம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 18.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தை பொறுத்தவரை 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டு 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தில் 2017-ம் ஆண்டு 53,800-ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 77,484-ஆக உயர்ந்துள்ளது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    60 நாட்களுக்குள் 'ரீபண்ட்' வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.

    கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் 127 கோடி வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
    • ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது.

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 1,61,497 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 31,013 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 80,292 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.39,035 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ. 11,900 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 1,028 கோடி உட்பட) ஆகும்.

    ஜூன் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தின் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெற்ற வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.

    ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது. மே மாதத்தில் இது ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர்.
    • பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பிரேம்ராஜா. இவர் திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

    இவர் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார். பிரேம் ஜி.எஸ்.டி. வரியை சரியாக கட்டுவதில்லை என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு பாக்கி வைத்துள்ளார் என்பது தொடர்பாக சோதனைகளை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    • மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.
    • கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது.

    கடந்த மே மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.28,411 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.35,828 கோடியும் வசூலாகி இருக்கிறது.

    ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,363 கோடி ஆகும்.

    கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    • ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.
    • பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. தற்போது இந்த உச்ச வரம்பை ரூ.15,390 கோடியாக குறைத்து இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

    மாநிலத்தின் கடன் வரம்பு பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கான பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினை இது. மாநில வளர்ச்சி தொடர்பான பிரச்சினை. ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்' என தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றின் மூலம் தனது கருவூலத்தை நிரப்பி வரும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் விவகாரத்தில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய பினராயி விஜயன், பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு என்றும் கூறினார்.

    இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சிகளையும் அவர் மறைமுகமாக சாடினார்.

    • இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
    • கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில், கடந்த மாதத்தில் (ஏப்ரல்) ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    இதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது. அதை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூல் ரூ.19,495 கோடி அதிகம் ஆகும்.

    இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். குறைந்த வரி விகிதங்கள் இருந்தாலும், வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியை காட்டுவதாகவும் பிரதமர் கூறி உள்ளார்.

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
    • கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 13 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. அமலான காலம்தொட்டு இதுதான் 2-வது அதிகபட்ச வசூல் ஆகும்.

    முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிக அதிகளவில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது.

    கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.29,546 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.37,314 கோடியும் வசூலாகி இருக்கிறது.

    ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.82,907 கோடி ஆகும். இதில் பொருட்கள் இறக்குமதி வரி ரூ.42,503 கோடியும், செஸ் வரி ரூ.10,355 கோடியும் அடங்கும்.

    ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் கடந்த மார்ச் மாதம் இதுவரையில் இல்லாத வகையில் அதிகளவில் அமைந்துள்ளது.

    2022-23 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். மாதாந்திர சராசரி என்று எடுத்துக்கொண்டால் ரூ.1.51 லட்சம் கோடி ஆகும்.

    • தமிழ்நாட்டுக்கு முறையே ரூ.11,142 கோடி, ரூ.6697 கோடி, ரூ.16,215 கோடி என மொத்தம் ரூ.34,054 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
    • புதுச்சேரிக்கு ரூ.607 கோடி, ரூ.329 கோடி, ரூ.723 கோடி, ரூ.1,659 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு விவரங்கள் குறித்து பாராளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர்.

    அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

    அதில், இந்திய கட்டுப்பாட்டாளர் மற்றும் பொது தணிக்கையாளரின் தணிக்கை புள்ளிவிவரங்கள் கிடைத்த பிறகே ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மந்திரி, கடந்த 3 ஆண்டுகளுக்கான இழப்பீடு விவரங்களை பட்டியலாக கொடுத்திருந்தார்.

    இதன்படி 2020-2021, 2021-2022, 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 656 கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இதில் தமிழ்நாட்டுக்கு முறையே ரூ.11,142 கோடி, ரூ.6697 கோடி, ரூ.16,215 கோடி என மொத்தம் ரூ.34,054 கோடி வழங்கப்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு ரூ.607 கோடி, ரூ.329 கோடி, ரூ.723 கோடி, ரூ.1,659 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.

    புதுடெல்லி:

    மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.

    கடந்த ஆண்டைவிட கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
    • மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுகுறித்து துணைக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    'ஒரே நாடு ஒரே வரி' என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம். 'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படும் அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான், உண்மையிலேயே அது 'ஒரே நாடு ஒரே வரி'.

    ஜி.எஸ்.டி. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். நிஜமாகவே கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகின்ற கூட்டமோ, கவுன்சிலோ இருந்தால், இழப்பீடு தொகை குறித்த விவாதமும் இந்த கவுன்சிலில் தான் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரோ, மத்திய அரசோ முடிவெடுத்து, உண்டு, இல்லை என்று சொல்வது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்கங்களுடன் ஏற்கப்பட்டது.
    • மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும் என தகவல்

    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று வழங்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து விடுவிக்க உள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.

    பென்சில் ஷார்ப்னர் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும், தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
    • எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்

    புதுடெல்லி:

    டெல்லியில் தொழில் வர்த்தக சபை சார்பில், பட்ஜெட் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பட்ஜெட்டில் மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

    அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே உள்ளதுதான். முந்தைய நிதி மந்திரி இதற்கான வாய்ப்பை திறந்து வைத்திருந்தார்.

    பெட்ரோலியம் கச்சா, மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), அதிவேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவை ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் தேதியை ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும். மாநிலங்கள் ஒப்புக்கொண்டால், பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவோம். 

    எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் என்னிடம் விகிதத்தை சொன்னவுடன், அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம்.

    எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம். வளர்ச்சியின் வேகத்தை தளர்த்தவோ அல்லது நீர்த்துப்போகவோ விடக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×