search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்
    X

    ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

    • ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
    • ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது.

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 1,61,497 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 31,013 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 80,292 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.39,035 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ. 11,900 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 1,028 கோடி உட்பட) ஆகும்.

    ஜூன் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தின் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெற்ற வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.

    ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது. மே மாதத்தில் இது ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×