search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவின் கடன் வரம்பு குறைப்பு- மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்
    X

    கேரளாவின் கடன் வரம்பு குறைப்பு- மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்

    • ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.
    • பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. தற்போது இந்த உச்ச வரம்பை ரூ.15,390 கோடியாக குறைத்து இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

    மாநிலத்தின் கடன் வரம்பு பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கான பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினை இது. மாநில வளர்ச்சி தொடர்பான பிரச்சினை. ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்' என தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றின் மூலம் தனது கருவூலத்தை நிரப்பி வரும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் விவகாரத்தில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய பினராயி விஜயன், பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு என்றும் கூறினார்.

    இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சிகளையும் அவர் மறைமுகமாக சாடினார்.

    Next Story
    ×