என் மலர்

  இந்தியா

  மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம்
  X

  மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
  • கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 13 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

  இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. அமலான காலம்தொட்டு இதுதான் 2-வது அதிகபட்ச வசூல் ஆகும்.

  முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிக அதிகளவில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது.

  கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.29,546 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.37,314 கோடியும் வசூலாகி இருக்கிறது.

  ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.82,907 கோடி ஆகும். இதில் பொருட்கள் இறக்குமதி வரி ரூ.42,503 கோடியும், செஸ் வரி ரூ.10,355 கோடியும் அடங்கும்.

  ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் கடந்த மார்ச் மாதம் இதுவரையில் இல்லாத வகையில் அதிகளவில் அமைந்துள்ளது.

  2022-23 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். மாதாந்திர சராசரி என்று எடுத்துக்கொண்டால் ரூ.1.51 லட்சம் கோடி ஆகும்.

  Next Story
  ×