என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "GST Revenue"
- ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.59 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
- ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.65 கோடியாக இருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.
இந்நிலையில், மொத்தமாக ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது. இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
- நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
புதுடெல்லி:
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.
கடந்த ஆண்டைவிட கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.55 லட்சம் கோடி என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது.
இதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம் பெறப்பட்ட வருவாயாகும். செஸ் வரி ரூ.10,630 கோடியும் உள்ளடங்கியதாகும். நடப்பு நிதியாண்டில் ஜனவரியில், முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வசூலான ஜி.எஸ்.டி. வசூல் வரலாற்றில் கடந்த 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1.68 லட்சம் கோடியே அதிகபட்சமாக இருக்கிறது. இந்த ஜனவரி வசூலானது அதற்கடுத்ததாக 2-வது அதிகபட்சமாக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022 டிசம்பரில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.
- தொடர்ந்து 10-வது முறையாக மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
புதுடெல்லி:
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26 ஆயிரத்து 711 கோடி. மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.33 ஆயிரத்து 357 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.78 ஆயிரத்து 434 கோடி. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூ. 40 ஆயிரத்து 263 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூ.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும்.
தொடர்ந்து, 10-வது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது என்பது குற்ப்பிடத்தக்கது.
- ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட இது 56 சதவீதம் அதிகம் ஆகும்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 616 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.23,306 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடியும், ஒன்றிணைந்த ஜிஎஸ்டி ரூ.75,887 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,102 கோடி உட்பட), செஸ் ரூ.11,018 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,197 கோடி உட்பட) அடங்கும்.
ஜூன் மாத வசூலானது கடந்த ஏப்ரல் மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து மிகப்பெரிய தொகையாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் போலி பில் தயாரித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்