ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.55 லட்சம் கோடி - நிதி அமைச்சகம் தகவல்

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.55 லட்சம் கோடி என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.55 லட்சம் கோடி - நிதி அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி:

மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது.

இதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம் பெறப்பட்ட வருவாயாகும். செஸ் வரி ரூ.10,630 கோடியும் உள்ளடங்கியதாகும். நடப்பு நிதியாண்டில் ஜனவரியில், முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.

இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வசூலான ஜி.எஸ்.டி. வசூல் வரலாற்றில் கடந்த 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1.68 லட்சம் கோடியே அதிகபட்சமாக இருக்கிறது. இந்த ஜனவரி வசூலானது அதற்கடுத்ததாக 2-வது அதிகபட்சமாக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com