search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தலங்கள்"

    • ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.
    • இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    திருவொற்றியூர் கோவில்-படம் பக்க நாதர்

    ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.

    இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களைப் பெற்றான்.

    அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தானப் பெயரும் உண்டு.

    இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.

    இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.

    • பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.
    • பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    திருவொற்றியூருக்கு வாருங்கள்

    சென்னையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது.

    பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.

    அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்ற புகழ் கொண்டது இத்தலம்.

    பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும்.

    கலையழகும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது.

    சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது.

    "ஒற்றியூர் தொழ தொல்வினையும் ஓயும்" என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்புடைய திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் ஈசனை வழிபட்டு புண்ணியத்தையும் பெற்று வரலாம்.

    அதற்கு உங்களுக்கு உதவும் வகையில் மாலைமலர் இந்த தொகுப்பை தருகிறது.

    இதில் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பழமை சிறப்பு, ஆலய அமைப்பு சிறப்பு, சன்னதிகள் சிறப்பு மற்றும் வழிபாட்டு பலன்களை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    படித்து, வழிபட்டு அருள்மிகு தியாகராஜரின் அருளையும், வடிவுடை அம்மனின் கருணையையும் பெற வாழ்த்துக்கள்.

    • ஊட்டிக்கு வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

    மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்தோடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதையும் காண முடிகிறது.

    இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர் மழை பெய்து கொண்டே இருந்தால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.மஞ்சூர், ஊட்டி, கூட லுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

    தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப் பட்டன.

    இதேபோல் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும்.
    • கார் பார்க்கிங், நுழைவுக்கட்டணம் வாயிலாக ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் 2 மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். மலைகளை யும் இணைக்கும் இந்த பாலம் 1240 அடி நீளமும், தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும் சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் தொட்டிப்பாலம் என பெயர் பெற்றது. தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். 104 அடிக்கு கீழே பரளியாறு ஓடுகிறது. தொட்டிப் பாலத்தின் இன்னொரு பகுதி நடை பாதையாக பயன்படுகிறது. இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம்.

    இந்த பாலம் சர்வதேச அளவில் அனைவரின் பார்வையை கவர்ந்து இப் போதும் அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த தொட்டிப் பாலத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியினர் விவசாயமும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது. காமராஜரின் தொலைநோக்கு பார்வை காரணமாகவே இந்த பாலம் இங்கு அமைந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை செழிப்புடன் வைத்திருக்கிறது.

    இவ்வாறு விவசாய தேவைக்காக கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் இன்றைக்கு சுற்றுலா தலமாக மாறி திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருவிக்கரை ஊராட்சிக்கு கணிசமான வருவாயை தரும் இடமாக மாறி உள்ளது. கார் பார்க்கிங், நுழைவுக்கட்டணம் வாயிலாக ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

    குத்தகைதாரர் மூலமாக வாகன பார்க்கிங், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் வரும் வாகனங்கள் வெகுதூரத்துக்கு வரிசையாக நின்று கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறது. வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

    நேற்று கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொட்டிப்பாலத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

    தொட்டிப்பாலத்தின் மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 கழிப்பிடங்களில் ஒரு கழிப்பிடம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஒரு கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. செயல்பாட்டில் உள்ள கழிப்பிடத்தில் வசதிகள் இல்லை. அதனை சீரமைக்க வேண்டும். ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாத்தூர் தொட்டிப் பாலத்தை நவீன மயமாக்குவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

    இதற்காக சட்டசபையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நவீனமயமாக்குவதற்கு முன்பாக அடிப்படை வசதிகளையாவது செய்துதர முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

    இதேபோல் குளச்சல் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் மாலை வேளையில் குளச்சல் கடற்கரை வந்து பொழுதை இனிமையாக கழித்து செல்வர். மாலை வேளையில் மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டு களித்து மாலை நேர கடற்கரை காற்று வாங்கி செல்வது வழக்கம்.

    நேற்று மாலை குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர். பள்ளி கோடை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்களின் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிந்தது. அவர்கள் நண்பர்கள், குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கி னர். சிறுவர்கள் மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர். அருகில் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் குளச்சல் கடற்கரை களைக்கட்டி காணப்பட்டது. இதனால் தள்ளு வண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    குளச்சல் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் துறைமுக பழைய பாலம் அருகில் மணற்பரப்பில் அமருவது வழக்கம். பலர் மாலை இருள் சூழு தொடங்கியதும் சென்று விடுவர். சிலர் இரவு 8 மணி வரை அமர்ந்து செல்வர். பொதுமக்களின் நலன் கருதி பாலம் முன்பு நகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பழுதாகி 6 மாதங்களாகிறது. எனவே பழுதான ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும் என கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்
    • குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் டி.டி.சி. அப்ரூவ் இல்லாத பிளாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் : 

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியண்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி, லூயிஸ், ஜோபி, ராஜேஷ்பாபு, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ் வளர்ச்சிதுறை, விளையாட்டு துறை, சுற்று லாத்துறை, அரசு ரப்பர் கழகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியண்ட் தாஸ் பேசுகையில், குமரி மாவட்டம் கடல், மலை சார்ந்த மாவட்டமாகும். சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிப்பதுடன் சுற்றுலா ஸ்தலங்களை இணைத்து பஸ் விட வேண்டும். தக்கலையில் மொழிப்போர் தியாகி இறந்ததற்கு அரசு சார்பில் எந்த மரியாதையும் செய்யப்படவில்லை என்றார்.

    கவுன்சிலர்கள் கூறுகையில், தலைவர்கள் பெயர்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் டி.டி.சி. அப்ரூவ் இல்லாத பிளாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை அழித்து பிளாட்டுகள் போட்டு வருகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேர்க்கிளம்பி பதிவாளர் அலுவலகத்தில் சாதாரண மக்கள் பதிவு செய்ய இயலவில்லை.

    சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றனர்.

    அதிகாரிகள் கூறியதாவது:-

    கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து அறி வுறுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கோப்புகள் தமிழில் கையாளப்படுகிறதா? என்பது கண்காணிப்பு செய்யப்படுகிறது. திருக்குறளை முழுமையாக ஒப்புவிப்பவர்களுக்கு ஏற்கனவே ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அது ரூ.15 ஆயிரமாக உயர்த்தபட்டுள்ளது.

    மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உரிய அப்ரூவல் இல்லாமல் பதிவுகள் செய்யப்படுவது இல்லை.

    திருவள்ளுவர் சிலையில் ரூ.10.22 கோடியில் பணிகள், சிற்றார்-2 அணை பகுதியில் ரூ.3.40 கோடியில் பணிகள், முட்டம்-திற்பரப்பு மேம்பாடு பணிகள் ரூ.7.15 கோடியில் நடக்க உள்ளது. உதயகிரி கோட்டையில் ரூ. 75 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கன்னியாகுமரி கடலில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியா குமரி முக்கடல் சங்க மத்தில் காலையில் இருந்தே ஏராளமான குவிந்தி ருந்தனர். அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

    ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட வில்லை. இதனால் அங்கு பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து10மணிக்கு பிறகுதான் படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தைமட்டும் பார்வையிட்டு வந்தனர்.

    இன்று காலை வழக்கத்தை விடஅதிகஅளவு சுற்றுவா பயணிகள்விவேகானந்தர்மண்டபத்தைபடகில்சென்றுபார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர்சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    தற்போது மழை குறைந்து, பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவில் நீர்ப்பனியும் நிலவி வருகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    இந்த ஆண்டு முதல் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது மழை கொட்டியது. மேலும் கடும் குளிரும் காணப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 3 தினங்களாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் படகு இல்லம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதைத் தொடா்ந்து போலீசாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

    கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 8,000 சுற்றுலாப் பயணிகளும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்த நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

    அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

    • கன்னியாகுமரி மாவட்டம் பலதரப்பட்ட இயற்கையுடன் ஒன்றிய மரங்கள், பல்வேறு வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த மாவட்டம்
    • 170 மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் கன்னியா குமரி கடற்கரை மற்றும் மணக்குடி ஊராட்சிக் குட்பட்ட மணக்குடி காய லில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பூவரசு, புன்னை, வேம்பு மரக்கன்றுகள் மற்றும் மாங்ரோ காடு மரகன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் பலதரப்பட்ட இயற்கையுடன் ஒன்றிய மரங்கள், பல்வேறு வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த மாவட்டமாகும். இவற்றை யெல்லாம் இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றோம்.

    அதன் அடிபப்டையில், கன்னியாகுமரி கடற்கரை யோரமாக தனியார் பங்களிப்புடன் பூவரசு, புன்னை, வேம்பு உள்ளிட்ட 170 மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மணக்குடி ஊராட் சிக்குட்பட பகுதியானது பெரும்பாலும் சதுப்பு நில பகுதி என்பதால் பல்வேறு உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள் காணப்படுகிறது. இப் பகுதிகளில் அதிகமாக சீமை கருவேலம் மரங்கள் உள்ளது.

    இம்மரங்களை முற்றிலு மாக அகற்றி, மணக்குடி கால்வாயினை தூர்வாரி அக்கால்வாயினை சுற்றி மாங்ரோ காடு மரக்கன்று கள் நடுவதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் ஆரம்பிக்க ப்பட்டது. தற்போது மாங்ரோ மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து வருகிறது. மேலும், அதன் தொடர்ச்சியாக 2000 மாங்ரோகாடு மரக் கன்றுகள் நடும் பணி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சதுப்புநில பகுதி என்பதால் இன்னும் கூடுதலாக மரங்கள் நடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், மாவட்ட வனத்துறை, உள்ளாட் சித்துறை வாயிலாக கணக்கெ டுக்கப்பட்டு, 10000 மரங்கள் தேவைக்கேற்ப நடும் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம்.

    மீன் குஞ்சுகள்

    மாங்ரோ காடுகளி லுள்ள தண்ணீரில் மீன் குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்கும், குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ந்து, மீண்டும் அவை கடலில் சேர்ப்பதற்கான உகந்த சூழ்நிலையினை மாங்ரோ காடுகள் வழி வகை செய்வதோடு, பல அரியவகை இன பறவை கள், பூச்சிகள், சிறிய விலங்கி னங்கள் போன்றவைகள் தங்குவ தற்கும், சூரியனுக்கு உகந்த இடமாகவும், சுற்றுச் சூழலினை பாதுகாக்கவும் வழிவகை செய்கிறது. மேலும், மாங்ரோ காடுகள் அடர்ந்த காடுகளாக மாறும் நிலையில் இயற்கை பேரிடர்கள் வரும் சூழ்நிலையில் இக்காடுகளின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பு அரணாக திகழும்.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தடுப்புச்சுவர் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயற்கை தடுப்பு அமைப்பதற்காக மரங்கள் நடும் பணியினை மேற்கொள்வதோடு, கடலோரத்தில் மாங்ரோ காடுகள் வளர்ப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கேயும் மாங்ரோ மரங்கள் வளர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முட்டம், திற்பரப்பு சூழியல் சுற்றுலா தலமாக அனுமதிக்கப் பட் டுள்ளதோடு, கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்தலமாக மேம் படுத்துவதற்கான பணி களை ஆராய்ந்து, அதிகமான சுற்றுலாத்தலங்கள் அமைப்ப தற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ் சாலை (நிலமெடுப்பு) ரேவதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், வக்கீல் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×