search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான சுற்றுலா தலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
    X

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான சுற்றுலா தலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    • கன்னியாகுமரி மாவட்டம் பலதரப்பட்ட இயற்கையுடன் ஒன்றிய மரங்கள், பல்வேறு வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த மாவட்டம்
    • 170 மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் கன்னியா குமரி கடற்கரை மற்றும் மணக்குடி ஊராட்சிக் குட்பட்ட மணக்குடி காய லில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பூவரசு, புன்னை, வேம்பு மரக்கன்றுகள் மற்றும் மாங்ரோ காடு மரகன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் பலதரப்பட்ட இயற்கையுடன் ஒன்றிய மரங்கள், பல்வேறு வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த மாவட்டமாகும். இவற்றை யெல்லாம் இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றோம்.

    அதன் அடிபப்டையில், கன்னியாகுமரி கடற்கரை யோரமாக தனியார் பங்களிப்புடன் பூவரசு, புன்னை, வேம்பு உள்ளிட்ட 170 மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மணக்குடி ஊராட் சிக்குட்பட பகுதியானது பெரும்பாலும் சதுப்பு நில பகுதி என்பதால் பல்வேறு உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள் காணப்படுகிறது. இப் பகுதிகளில் அதிகமாக சீமை கருவேலம் மரங்கள் உள்ளது.

    இம்மரங்களை முற்றிலு மாக அகற்றி, மணக்குடி கால்வாயினை தூர்வாரி அக்கால்வாயினை சுற்றி மாங்ரோ காடு மரக்கன்று கள் நடுவதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் ஆரம்பிக்க ப்பட்டது. தற்போது மாங்ரோ மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து வருகிறது. மேலும், அதன் தொடர்ச்சியாக 2000 மாங்ரோகாடு மரக் கன்றுகள் நடும் பணி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சதுப்புநில பகுதி என்பதால் இன்னும் கூடுதலாக மரங்கள் நடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், மாவட்ட வனத்துறை, உள்ளாட் சித்துறை வாயிலாக கணக்கெ டுக்கப்பட்டு, 10000 மரங்கள் தேவைக்கேற்ப நடும் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம்.

    மீன் குஞ்சுகள்

    மாங்ரோ காடுகளி லுள்ள தண்ணீரில் மீன் குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்கும், குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ந்து, மீண்டும் அவை கடலில் சேர்ப்பதற்கான உகந்த சூழ்நிலையினை மாங்ரோ காடுகள் வழி வகை செய்வதோடு, பல அரியவகை இன பறவை கள், பூச்சிகள், சிறிய விலங்கி னங்கள் போன்றவைகள் தங்குவ தற்கும், சூரியனுக்கு உகந்த இடமாகவும், சுற்றுச் சூழலினை பாதுகாக்கவும் வழிவகை செய்கிறது. மேலும், மாங்ரோ காடுகள் அடர்ந்த காடுகளாக மாறும் நிலையில் இயற்கை பேரிடர்கள் வரும் சூழ்நிலையில் இக்காடுகளின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பு அரணாக திகழும்.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தடுப்புச்சுவர் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயற்கை தடுப்பு அமைப்பதற்காக மரங்கள் நடும் பணியினை மேற்கொள்வதோடு, கடலோரத்தில் மாங்ரோ காடுகள் வளர்ப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கேயும் மாங்ரோ மரங்கள் வளர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முட்டம், திற்பரப்பு சூழியல் சுற்றுலா தலமாக அனுமதிக்கப் பட் டுள்ளதோடு, கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்தலமாக மேம் படுத்துவதற்கான பணி களை ஆராய்ந்து, அதிகமான சுற்றுலாத்தலங்கள் அமைப்ப தற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ் சாலை (நிலமெடுப்பு) ரேவதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், வக்கீல் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×