search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை இணைத்து பஸ் விட வேண்டும்
    X

    குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை இணைத்து பஸ் விட வேண்டும்

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்
    • குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் டி.டி.சி. அப்ரூவ் இல்லாத பிளாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியண்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி, லூயிஸ், ஜோபி, ராஜேஷ்பாபு, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ் வளர்ச்சிதுறை, விளையாட்டு துறை, சுற்று லாத்துறை, அரசு ரப்பர் கழகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியண்ட் தாஸ் பேசுகையில், குமரி மாவட்டம் கடல், மலை சார்ந்த மாவட்டமாகும். சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிப்பதுடன் சுற்றுலா ஸ்தலங்களை இணைத்து பஸ் விட வேண்டும். தக்கலையில் மொழிப்போர் தியாகி இறந்ததற்கு அரசு சார்பில் எந்த மரியாதையும் செய்யப்படவில்லை என்றார்.

    கவுன்சிலர்கள் கூறுகையில், தலைவர்கள் பெயர்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் டி.டி.சி. அப்ரூவ் இல்லாத பிளாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை அழித்து பிளாட்டுகள் போட்டு வருகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேர்க்கிளம்பி பதிவாளர் அலுவலகத்தில் சாதாரண மக்கள் பதிவு செய்ய இயலவில்லை.

    சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றனர்.

    அதிகாரிகள் கூறியதாவது:-

    கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து அறி வுறுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கோப்புகள் தமிழில் கையாளப்படுகிறதா? என்பது கண்காணிப்பு செய்யப்படுகிறது. திருக்குறளை முழுமையாக ஒப்புவிப்பவர்களுக்கு ஏற்கனவே ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அது ரூ.15 ஆயிரமாக உயர்த்தபட்டுள்ளது.

    மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உரிய அப்ரூவல் இல்லாமல் பதிவுகள் செய்யப்படுவது இல்லை.

    திருவள்ளுவர் சிலையில் ரூ.10.22 கோடியில் பணிகள், சிற்றார்-2 அணை பகுதியில் ரூ.3.40 கோடியில் பணிகள், முட்டம்-திற்பரப்பு மேம்பாடு பணிகள் ரூ.7.15 கோடியில் நடக்க உள்ளது. உதயகிரி கோட்டையில் ரூ. 75 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×