search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கொலை"

    • சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.

    தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.

    போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.

     

    4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.

    இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.

    முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.

    இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.

    இவ்வாறு போலீசார் கூறினார்.

    இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோமளா திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கொட்டாங்காவை சேர்ந்தவர் கோமளா (வயது 17).

    கோமளாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். பெற்றோர் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை கோமளாவுக்கு பிடிக்கவில்லை.

    இதனால் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என கோமளா தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். பெற்றோரும் மகளை பல்வேறு விதங்களில் சமாதானம் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கோமளா திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த கோமளா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கோமளாவின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கர்லடினே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோமளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமளாவின் தாயை கைது செய்தனர்.

    • குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (வயது 23).

    இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து எவரெஸ்ட் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமினில் விடுதலை ஆனார்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து எவரெஸ்ட் கோர்ட்டில் ஆஜரானார்.

    தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் ஜெயில் தண்டனையும் மற்றும்ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். எவரெஸ்ட்டிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    • மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம்.
    • வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் தாதேப்பள்ளியை சேர்ந்தவர் யேசலு. இவரது மனைவி மனோகரம்மா. தம்பதிக்கு 17 வயதில் ராணி எஸ்தர் என்ற மகள் இருந்தார். இவர்களது வீடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ளது. மேலும் அருகிலேயே போலீஸ் நிலையமும் உள்ளது.

    ராணி எஸ்தருக்கு 7 வயதாக இருந்தபோது திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அப்போது அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோனது. அவரை பல டாக்டர்களிடம் காண்பித்த போதும் கண் பார்வை சரியாகவில்லை.

    இந்த நிலையில் ராணி எஸ்தரின் தந்தை கண்ணாவரம் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம். ராணி எஸ்தரின் வீட்டின் அருகே வசித்து வருபவர் குக்கல ராஜு (வயது 30). எப்போதும் கஞ்சா போதையில் சுற்றிவரும் இவர் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகரம்மா வழக்கம் போல் வேலைக்கு சென்று இருந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குக்கல் ராஜு கஞ்சா போதையில் ராணி எஸ்தர் வீட்டிற்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அதற்கு ராணி எஸ்தர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடியதால் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மனோகரம்மா மற்றும் சில பெண்கள் சேர்ந்து குக்குல ராஜுவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குக்கல ராஜு நேற்று மனோகரம்மா வேலைக்கு சென்றதை அறிந்து அவரது வீட்டிற்குள் புகுந்து ராணி எஸ்தரை சரமாரியாக வெட்டினார். அவரது தலை, கழுத்து பகுதியில் பயங்கரமாக வெட்டு விழுந்தது.

    ராணி எஸ்தர் வலியால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது உயிருக்கு போராடியபடி கிடந்தார். குக்கல் ராஜு அங்கிருந்து தப்பி சென்றார்.

    உடனடியாக ராணி எஸ்தரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குக்கல் ராஜுவை கைது செய்தனர்.

    குக்கல ராஜு ஏற்கனவே கஞ்சா போதையில் பல பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருந்த போதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

    மேலும் முதலமைச்சரின் வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில் கொலை நடந்தது எப்படி. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் முயற்சி செய்யவில்லை என அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றம் சாட்டினார்.

    • அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார்.
    • பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து சிறுமியின் ஆடையில் பற்ற வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து அவரது ஆடையில் பற்ற வைத்தார்.

    இதில் சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமியின் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் தேனி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மையம் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரது தாய் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    அப்போது சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மறியல் முடிவுக்கு வந்தது.

    ×