என் மலர்
இந்தியா

பான் மசாலாவுக்கு பதிலாக சிப்ஸ் வாங்கிய சிறுமி அடித்துக் கொலை
- குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
- சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






