search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு"

    • இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன.
    • சிறார்களால் ஓட்டப்பட்ட வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டுநர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போக்கு வரத்து விதிமுறைகள் மற்றும் பதாகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. இதன் விளைவாக 18 ஆயிரத்து 500 பேர் இறந்து ள்ளனர் என்பது வேத னைக்குறியது. இவற்றில் 70 சதவீதம் மோட்டார் சைக்கிள் விபத்துகள் ஆகும். 18 வயதிற்கு முன்பாகவே பள்ளி மாணவ,மாணவிகள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது.

    இதனை பெற்றோர்கள் எந்த வகையிலும் அனு மதிக்க கூடாது. இதனை மீறும் பெற்றோர் களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும் வழங்கப்படும். இதற்கான 2019 சட்டப்பிரிவு 199 (ஏ)ன் படி சிறார்களால் ஓட்டப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அத்து டன் சம்பந்தப்பட்ட சிறார்கள் 25 வயதிற்கு பிறகு தான் ஓட்டுநர் உரிமைத்தை பெற முடியும். ஆகவே இது பற்றிய விவரங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஜனவரி மாதம் மட்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இனி மாதம் தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் தமிழ்ச்செல்வன், மாரியப்பசாமி, காயல்பட்டினம் ஓட்டுனர் பள்ளி ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தட்டார் மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தில் போலீசார் சார்பில் மாற்றத்தைத் தேடி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் குருசுமிக்கேல், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச் சங்க செயலர் லூர்து மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலை பாதுகாப்பு குறித்து டிராக்டர் ஓட்டுநர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் பவுலோஸ் எடுத்துரைத்தார். தொடர்ந்து டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வண்டி உரிமம் ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும், விபத்து தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் ஓட்டுனர்கள் கோபால், சேர்மதுரை, கிதியோன், சுதாகர், டைட்டஸ், ஜஸ்டின், இன்பம், பரத்,பீட்டர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் போக்குவரத்து காவல் நிலையம், காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலை, கல்லூரி சாலை வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை வலம் வந்தனர். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கண் பரிசோதனை செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், அரசு போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் நலங்கிள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது, கடந்த ஆண்டு சாலை விபத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அது உங்கள் கையில் தான் உள்ளது. மிதவேகம் மிக நன்று, என்ற கருத்தை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றனர். முடிவில் விவசாய ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • சாலை விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சாலைப் பாதுகாப்பு வார விழா நடந்தது. இதில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும், வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஓட்டினார். பின்னர் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம சுப்ரமணியன், முத்து மாரியப்பன், மேற்பார்வை யாளர் மாடசாமி, கோவில்பட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள், வாகன விற்பனை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் இன்று போக்குவரத்துத்துறை சார்பாக அமைச்சர் முர்த்தி சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு பொது மக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 11.01.2023 முதல் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் தொடங்கி கே.கே நகர் தோரண வாயில் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில் நாதன், வட்டார போக்கு வரத்து அலு வலர்கள் சிங்கார வேலன், சித்ரா உள்பட வட்டார போக்கு வரத்து ஆய்வா ளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    முசிறி:

    சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு, முசிறி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஹெல்மெட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    கோட்டாட்சியர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம்
    • கலெக்டர் வழங்கினார்

    வாணியம்பாடி:

    2023 முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

    இதனை ஒட்டி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் பகுதியில் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் டோல்கேட் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு பட்டை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட ராகவன், விஜயகுமார், அமர்நாத் உள்ளிட்டோரும் வாணிய ம்பாடி சரக போலீசாரும் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது.
    • மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் சென்றவாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    கோவில்பட்டி:

    தி லிட்டரரி அசோசி யேசன் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங், ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் இணைந்து புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு ஸ்கேட் டிங் பேரணியை நடத்தினர்.

    கோவில்பட்டி பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி மாதா கோவில் ரோடு வழியாக சென்று புது ரோட்டில் அமைந்துள்ள தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது. சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .

    பேரணிக்கு துரைச்சாமி நாடார், மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளரும் தொழிலதிபருமான எஸ்.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார். எவ ரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலெட்சுமி , சிறப்பு மகப்பேறு நிபுணரும் அனுபாலா இருதயம் மற்றும் மகப்பேறு மருத்துவ மைய மருத்துவருமான எம்.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில்பட்டி போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலி ங்கம், போக்கு வரத்து காவலர் இளையராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்கேட்டிங்கில் மாணவ, மாணவிகள் சென்று சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராஜயோக ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மாநில ஆலோசகர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், தொழிலதிபர் சடகோபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். யோகா ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை தி லிட்ட ரரி அசோசி யேசன்ஸ் ஸ்போர்ட்ஸ் செயலாளர் வி.ஆர். ராஜ மாணிக்கம், ராஜ் யோகா ஸ்கேட்டிங், ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நோ-பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    நாகர்கோவில்:

    அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களில் கூட்டாக ஆய்வு நடத்த வேண்டும் என்று அதிகா ரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட் டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கலெக்டர் அர விந்த் தலைமையில் நடந் தது. குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் முன் னிலை வகித்தார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய சாலை பராமரிப்பு மற்றும் முன் னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் ஆய்வு செய் யப்பட்டது.

    அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் அவற்றை தவிர்த்திடும் வகையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை வட்டார போக் குவரத்து அலுவலர்கள் கூட்டாக ஆய்வு செய்து அறிக்கை செய்ய அறிவு றுத்தப்பட்டது.

    முக்கிய சாலைகளில் மின் விளக்குகள் மற்றும் பழுதுபார்க்கப்பட வேண் டிய சாலைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைப்பது குறித்து நெடுஞ் சாலைத்துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் எடுத்து ரைக்கப்பட்டது.

    இரு சக்கர வாகனங்க ளில் செல்பவர்கள் ஹெல் மெட் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட் டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று கலெக்ட ரால் தெரிவிக்கப்பட்டது.

    நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் நோ பார்க் கிங் பகுதியில் அல்லது சாலையில் இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டி கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது. ஆபத்தான மின் கம்பங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் உள்ள ஏற்கனவே இருந்த மின்கம்பங்களை மாற்றி இடையூறு இல்லாமல் சாலை போக்குவரத்து மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள மின் துறை அலுவலர்களிடம் தெரி விக்கப்பட்டது.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடு மையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.பத்மநாப புரம் சப் கலெக்டர் கவுசிக், மாநக ராட்சி ஆணையர், ஆனந்த்மோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது வீராசாமி, நாகர்கோவில் ஆர்.டி.ஒ. சேதுராம லிங்கம், நாகர்கோவில்- மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர், துணை காவல் கண்கா ணிப்பாளர்கள், நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர், மருத்துவ பணிகள் துணை இயக் குநர் டாக்டர் மீனாட்சி, தாசில்தார்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள் ளிட்ட பல்துறை அலுவ லர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
    • பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் என்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் கலந்து கொண்டார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்க டேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன்கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது, சாலையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

    ஆர்.என்.ஆர். டிரான்ஸ்போர்ட் மாதவன், சாலை ஆலோசகர் ராஜேஷ், மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர் செல்வராஜ், என் .எஸ். எஸ். திட்ட அலுவலர் சந்துரு மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். முடிவில் துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    ×